அமேதி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமேதி மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 72 மாவட்டங்களில் ஒன்றாகும். அமேதி மாவட்டம், அவத் பிரதேசத்தின் அயோத்தி கோட்டத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் கௌரிகஞ்சு நகரில் உள்ளது. நேரு குடும்பத்தினரில் பலரும் அமேதி மக்களவைத் தொகுதியின் சார்பாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சில ஆண்டுகளுக்கு, "சத்திரபதி சாகுஜி மகராஜ் நகர்" என்ற பெயரில் இயங்கியது. பின்னர், அமேதி என்ற பழைய பெயருக்கே மாற்றப்பட்டது.
Remove ads
உத்தரப் பிரதேசத்தின் ஏனைய பெருநகரங்களுடன் அமேதி இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி, லக்னோ, கான்பூர், டேராடூன், ஹரித்துவார், அலகாபாது, வாரணாசி, கல்கத்தா, பூரி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
சில உத்தரப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இங்கிருந்து இயங்குகின்றன. [2]
பிரிவுகள்
இது கௌரிகஞ்சு, அமேதி, முசாபிர்கானா, சலோன், திலோய் ஆகிய ஐந்து வட்டங்களைக் கொண்டது. [3] இந்த மாவட்டத்தின் பெரிய நகரமாக அமேதி விளங்குகிறது.
இது கௌரிகஞ்சு, ஜகதீஷ்பூர், அமேதி, திலோய், சலோன் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்தும் அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [3]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads