அம்முவாகிய நான்
பத்மாமகன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்முவாகிய நான் ( Ammuvagiya Naan ) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது பத்மமகன் இயக்கத்தில் ஆர். பார்த்திபன் மற்றும் பாரதி நடித்திருந்தனர். படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.[1] இப்படம் செப்டம்பர் 2007 இல் வெளியாகி வெற்றி பெற்றது.[2][3]
Remove ads
கதைச் சுருக்கம்
பாலியல் தொழிலாளியின் வீட்டில் வளர்க்கப்படும் அனாதையான அம்முவை ( பாரதி ) சுற்றியே படம் சுழல்கிறது. அத்தகைய சூழ்நிலையில் வளர்ந்த அவள், உலகின் பழமையான தொழிலின் மீது மோகத்தை வளர்த்துக் கொள்கிறாள். கௌரிசங்கர் ( ஆர். பார்த்திபன் ) என்ற எழுத்தாளனை அவள் சந்திக்கிறாள். அவர் ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதினத்தை எழுத அவளது இடத்திற்கு வருகிறான். அவளுடைய குழந்தைத்தனமான அப்பாவித்தனம் கௌரிசங்கரால் ஈர்க்கப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறான். கௌரிசங்கரின் அன்பும் அக்கறையும் அம்முவிடம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. குடும்பத்தின் மதிப்பையும் ஒற்றுமையின் பிணைப்பையும் அவள் புரிந்துகொள்கிறாள். கௌரிசங்கர் தனது அம்முவாகிய நான் என்றா புதினத்தை முடித்து, அதற்கு தேசிய விருதை எதிர்பார்க்கிறான். ஒரு இலக்கிய சங்கத்தின் தலைவர் ( மகாதேவன் ) வடிவில் விதி ஒரு கொடூரமான செயலைச் செய்கிறது. அமுவாகிய நானுக்கு தேசிய விருதை உறுதி செய்வதற்காக அம்முவிடம் ஒரு இரவு தங்குவதற்கு பேரம் பேசுகிறான். இறுதியில், அம்மு இலக்கியச் சங்கத்தின் தலைவரைக் கொன்றுவிடுகிறாள்.
Remove ads
நடிகர்கள்
- கௌரிசங்கராக ஆர்.பார்த்திபன்
- அம்முவாக பாரதி
- இலக்கியக் கழகத் தலைவர் நாதனாக மகாதேவன்
- ராணியாக சாரி
- மல்லியாக இராகசுதா
- மோகனாக தென்னவன்
- ரகுவாக அபிசேக் சங்கர்
- கௌரிசங்கரின் சகோதரியாக சாந்தி வில்லியம்ஸ்
- சிறப்புத் தோற்றத்தில் சுஜா வருணீ
படத்திற்கு சபேஷ்-முரளி இசையமைத்துள்ளனர்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads