அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Tirunelveli) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகும். திருநெல்வேலியானது பெரும்பாலும் 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரியாகும். மேலும் இது தமிழ்நாட்டில் டிஓடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இது 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரி 23 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] இந்த நிறுவனம் ஐந்து இளநிகலை மற்றும் மூன்று முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இதன் பாடங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
Remove ads
படிப்புகள்
இந்த கல்வி நிறுவனமானது ஐந்து இளநிலை மற்றும் ஐந்து முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. [2]
இளநிலை படிப்புகள் பின்வருமாறு:
- சிவில் இன்ஜினியரிங்
- கணினி அறிவியல் பொறியியல்
- எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- இயந்திர பொறியியல்.
முதுநிலை படிப்புகள் பின்வருமாறு:
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பொறியியல் வடிவமைப்பு
- மின் மின்னணுவியல் மற்றும் இயக்கம்
- கட்டமைப்பு பொறியியல்
- பொறியியல் வடிவமைப்பு
Remove ads
துறைகள்
- சிவில் இன்ஜினியரிங் துறை
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை
- இயந்திர பொறியியல் துறை
- ஆங்கிலத் துறை
- கணிதத் துறை
- இயற்பியல் துறை
- வேதியியல் துறை
- உடற்கல்வித் துறை
- நூலக பொறியியல் துறை
சாதனைகள்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட 229 கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் இக்கல்லூரியானது இரு முறை ஏழாவது இடத்தைப் பிடித்தது. [3]
விடுதிகள்
இக்கல்லூரியானது ஏறக்குறைய 1200 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி வசதி கொண்டதாக உள்ளது. மாணவர்களின் வசதிக்காக நான்கு விடுதிகளும் (மணிமுத்தாறு, வைகை, பொருனை, கவிரி.) மாணவிகளுக்காக மூன்று விடுதிகள் (பவானி, அமராவதி, நர்மதை) உள்ளன. அனைத்து விடுதிகளும் மைய உடற்பயிற்சி கூடம் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகளுக்கான அரங்ங்களைக் கொண்டுள்ளன.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads