அரசு ஆயுர்வேத கல்லூரி, குவுகாத்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரசு ஆயுர்வேதக் கல்லூரி, குவுகாத்தி (Government Ayurvedic College, Guwahati) என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாமில் உள்ள ஜலுக்பாரியில் உள்ள ஆயுர்வேத நிறுவனம் ஆகும். 1948-ல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி முதலில் குவகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 2010-ல் சிறீமந்த சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

விரைவான உண்மைகள் Other name, வகை ...
Remove ads

வரலாறு

லோக்பிரியா கோபிநாத் பர்தலை, லோக்பந்து புவனேஸ்வர் பருவா மற்றும் நிறுவனர் அதிபர் ஜகதீசு சந்திர பட்டாச்சார்யா ஆகியோரின் முயற்சிகளால் இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இக்கல்லூரி நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி 1948ஆம் ஆண்டு திசம்பர் 20ஆம் தேதி அசாம் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் என்பவரால் உசான் பஜாரில் ஒரு வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. சூலை 1959-ல், அசாமின் ஜலுக்பாரியில் உள்ள தற்போதைய இடத்திற்குக் கல்லூரி நிரந்தரமாக மாற்றப்பட்டது.

Remove ads

படிப்புகள்

பட்டதாரி கல்வி

  • வழங்கப்படும் பட்டம்: இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை: 63 இடங்கள் [2]
  • படிப்புக் காலம்: ஒரு வருட உள்ளகப் பயிற்சி உட்பட ஐந்தரை ஆண்டுகள்.

இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ மாணவச் சேர்க்கையானது தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலானது.

முதுகலை கல்வி

முதுநிலை மருத்துவம்/அறுவையியல் படிப்பிற்கான சேர்க்கை, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வின் அடிப்படையிலானது.

இடங்கள் பகிர்வு

6 இடங்கள்
  • சம்கிதா சித்தாந்தத்தில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்).
6 இடங்கள்
  • சல்ய தந்திரத்தில் முதுநிலை அறுவையியல் (ஆயுர்வேதம்).
3 இடங்கள்
  • பிரசுதி தந்திரம் & ஸ்திரீ ரோகாவில் முதுநிலை அறுவையியல் (ஆயுர்வேதம்): 4 இடங்கள்
  • ரோக நிதானத்தில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்).
3 இடங்கள்
  • ஷாரிர் ரச்சனாவில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்).
2 இடங்கள்

மற்ற படிப்புகள்

  • முனைவர்
Remove ads

துறைகள்

  • கயா சிகிட்சா (மருந்து)
  • சல்யா (பொது அறுவை சிகிச்சை)
  • சலாக்யா (காது, மூக்கு, தொண்டை & கண் மருத்துவம்)
  • சமசுகிருதம், சம்கிதா மற்றும் சித்தாந்தம் (அடிப்படை கோட்பாடுகள்)
  • பிரசுதி தந்திரம் & ஸ்ட்ரிரோகா (மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்)
  • பால ரோகா (குழந்தை மருத்துவம்)
  • பஞ்சகர்மா (இயன்முறை சிகிச்சை)
  • ஸ்வஸ்தவ்ரித்தா (தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்)
  • திரவியகுணா (மருந்தியல்)
  • இராசாசாத்திரம் & பைசஜ்யா கல்பனா (புத்துணர்ச்சி மற்றும் மருந்து அறிவியல்)
  • அகடா தந்திரம் & விதி சாத்திரம் (நச்சுயியல் மற்றும் தடயவியல் மருத்துவம்)
  • ரோகா நிதன் & விக்ரிதி விக்யான் (நோயறிதல் மற்றும் நோயியல் அறிவியல்)
  • இரச்சனா சாரிர் (உடற்கூறியல்)
  • கிரியா சரிர் (உடலியல்) [3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads