அரிச்சந்திர புராணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரிச்சந்திர சரித்திரம்[1] என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் புராணம் அன்று காப்பியம்.[2]

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இது வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.[3]

இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்’.[4] இவரைக் ‘கவிராசர்’ எனச் சிறப்புப்பெயரால் அழைப்பர். [5] ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர்.

Remove ads

நூல்

வீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,

  1. விவாக காண்டம்
  2. இந்திர காண்டம்
  3. வஞ்சனைக் காண்டம்
  4. வேட்டஞ்செய் காண்டம்
  5. சூழ்வினைக் காண்டம்
  6. நகர் நீங்கிய காண்டம்
  7. காசி காண்டம்
  8. மயான காண்டம்
  9. மீட்சிக் காண்டம்
  10. உத்தர காண்டம்

என்னும் பத்துக் காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1215 பாடல்கள் உள்ளன.

பாடல்

சந்தப்பா

பெரும்புகழை பெறும்படி அருந்துயர் கெடும்படி பிரியம்பல வரும்படி யுளம்
விரும்பிய தனம்பெற மிகும்பெரு பதம்பெற விளங்கிய தவம்செய நெடும்
கரும்பவல் பெரும்பயன் தருகனி ரசங்கொடு கவர்ந்ததேன் உவந்தருள் புரிந்
இருங்கரி முகன்சிறு சதங்கையொடு கிண்கிணி இலங்கிய பதம்பெறு வனே [6]

மடக்கு

அறமி ருக்கும் மனத்தில் அனைவர்க்கும்
திறமி ருக்கும் புயத்தில் செழுஞ்சுடர்
நிறமி ருக்கும் படையின்கண் நீக்கமில்
மறமி ருக்கும் மடந்தையர் கண்ணினே [7]

நகர் நீங்கு படலம்

தொடைதுறந்து முடிதுறந்து பணிதுறந்து துடிமுரசம் துரந்து தாமக்
குடைதுறந்து வெண்கவரிக் குழாம்துறந்து கரிபரிதேர்க் குலம்து றந்து
கடைதுறந்து மறுகணைந்த காவலன்தன் திரிமுகத்தைகு கண்டோ ரெல்லாம்
அடையமனம் அழிந்துருகி அவரவரே முகத்தில்மறைந் தழுவார் ஆனார்[8]

இப்படியெல்லாம் மரபுவழியில் வந்த வளமான தமிழ்நடையை இந்நூலில் காணமுடிகிறது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads