அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில்

இலங்கையில் உள்ள மாரியம்மன் கோவில் From Wikipedia, the free encyclopedia

அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில்map
Remove ads

மகாமாரி அம்மன் கோயில் என்பது இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரியாலை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.

விரைவான உண்மைகள் மகாமாரி அம்மன் கோவில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அரியாலை பிரபங்குளம் மகாமாரியம்மன் கோயில் சுருக்க வரலாறு

அரியாலை பிரப்பங்குளம்மா மகாமாரி அம்ம்பமன் கோவில் மாம்பழம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் ஆடிப்பூரத்தில் தீர்த்தம் வருமாறு 15 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கள் 1983ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் இருந்த கட்டுத்தேரிற்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டில் இருந்து மரத்தாற் தேர் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் ஒவ்வொருநாளும் சிவாகம முறைப்படி 4 வேளை பூசைகள் நடைபெறுகின்றது. ஆரம்பத்தில் ஒருவரின் கீழ் இருந்த இந்த ஆலயம் பின்னர் அரியாலை அடியார்களாற் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பங்குனி மாதமும் பூச நட்சத்திரத்தில் முடிவடையக்கூடியதாக ஆண்டு அம்மன் அபிஷேகம் நடைபெறுகின்றது. மாதச் சதுர்த்தியும் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றது.ஆலய புனருத்தாரண வேலைகள் பாரிய அளவில் இடம்பெற்று கும்பாபிஷேகம் 19 ஜூலை 2011 இல் இனிதே நிறைவேறியது.

Remove ads

அரியாலை பிரபங்குளம் மகாமாரியம்மன் கோயில் ஆலய வரலாறு

Thumb
ஆலய மகா மண்டப முகப்புத் தோற்றம்

அரியாலை பிரப்பங்குளத்தை அடுத்து மேட்டுநிலம், பிரப்பங்குளத்தின் தென்பக்க நிலப்பகுதியில் மருத மரங்கள், வில்வ மரங்கள், நெல்லி மரங்கள் போன்ற தல விருட்சங்களுடன் தென்னை, பலா, கமுகு போன்ற மரங்களும் ஆங்காங்கு காணப்பட்டன. குளத்தின் அருகே பிரம்பு மூங்கில், விளாத்தி, கொண்டல், தர்ப்பைப் புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

இவ் ஊர் மக்கள் வயலில் நெல், சிறு தானியமும் தோட்டத்தில் புகையிலை, வாழை, மரவள்ளி போன்ற பயிர் வகைகளை விளைவித்து தமது சீவியத்தை நடாத்தினர். கடவுள் வழிபாட்டிலும் சைவ சமய அனுட்டானத்திலும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட வாழ்க்கை நெறியைப் பின்பற்றினார்கள்.

இக்கோயிலின் வரலாறு பற்றி ஓர் கர்ணபரம்பரைக்கதை தொன்றுதொட்டு செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாக இவ் ஊார் மக்களால் பேசப்பட்டு வருகின்றது. பிரப்பங்குளத்தை அண்டிய மேட்டு நிலத்தில் சிறுவர் சிறுமியர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவர்கள் களைப்படைந்ததால் இளறீர் குடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கிழவி பொல்லை ஊன்றிக்கொண்டு வந்து ”மக்களே எனக்குத் தாகமாக இருக்கிறது இளநீர் தாருங்கள்” என்று கேட்க, சிறுவர்கள் இளநியினை ஆச்சியிடம் கொடுத்துவிட்டுத் தமது மாடுகளைப் பார்க்கச் சென்று விட்டார்கள். பிறகு வந்து பார்த்த போது கிழவியைக் காணவில்லை. ”நாச்சி” ”நாச்சி” ”நாச்சி” என்று மூன்று தரம் கேட்டது. சிறுவர்கள் திகைத்து விட்டனர். இன்னும் ஒரு தினத்தில் சிறுவர்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு அழகான பெண் தலைவிரி கோலமாக வந்து நிற்பதைப் பார்த்து சிறுவர்கள் அவரைப் பார்த்து பயத்துடன் உங்களுக்கு என்ன என்று கேட்டார்கள். வந்தவர்களுக்கு தலையைக் காட்டினார். சிறுவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். தலையெல்லாம் கண்கள் இருக்கக்கண்டு திகைத்தனர். பயந்தனர். வந்த பெண் நாச்சியார் ஆலயம் எனக்கூறிக்கொண்டு மறைந்து விட்டார். இச்சம்பவம் காட்டுத்தீபோல் ஊரெல்லாம் பரவியது. ஊரவர் கூடி ஆலோசித்து பனையோலையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றை சின்னத்தம்பி உமையாச்சிக்கு சொந்தமான காணியில் 1824ம் ஆண்டு பங்குனி மாதம் புச நட்சத்திரமன்று அம்மன் விக்கிரகம் வைத்து நாச்சியார் கோவில் என்று அழைத்து வழிபாட்டிற்குரிய தலமாக்கினர்.

1924 இல் ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் இக்கோவில் கற்கோவிலாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஜ்துாபி, மூலஜ்தானம், மண்டபம், மடப்பள்ளி, கிணறு ஆகியன அமைக்கப்பட்டது. புன்னை மரத்தடியில் வைரவர் சூலம் நாட்டப்பட்டு வழிபடப்பட்டது. கருங்கல்லில் அம்பாளுக்கு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு சகல ஆகமக் கிரியைகளுடன் 1924ம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து நாச்சிமார் ஆலயம் என வழங்கலாயிற்று.

திருவாளர் சின்னையா – சின்னத்தம்பி திருமதி சின்னத்தம்பி உமையாச்சி பராமரித்த பின்னர் அவர்களின் பிள்ளைகள் திரு. சி. அருணாசலம், திருமதி சி. இராமநாதன் ஆகியோர் 1965ம் ஆண்டு வரை ஊர் மக்களின் ஒத்துளைப்புடன் பராமரித்தனர். திரு. சி. அருணாசலம் அவர்களே கோயில் முகாமையாளராக செயற்பட்டார்.  வழிபடுவோரின் வேண்டுகோளுக்கிணங்க திரு. சி. அருணாசலம் அவர்கள் 30.07.1965இல் அமைப்புரீதியாக பரிபாலனசபை ஒன்றை உருவாக்கினார். இதில் திரு வீரசிங்கம் கதிரவேலு செயலாளராகவும், திரு நாகமணி நடராசா பொருளாளராகவும் செயற்பட்டார்கள். இந் நிகழ்வு கோயில் நிர்வாக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஓர் மைல் கல்லாகும்.

நிர்வாக சபை விஸ்தரிப்பு, நிர்வாக சபை சட்டவிதிகளை ஆக்கியமை வழிபடுவோரால் நிர்வாகசபை தெரிவு செய்தல் போன்ற ஜனநாயக் பண்புகள் வளர்ச்சியடையலாயிற்று. ஆலய சட்டவலுவாக்க நிர்வாக வளர்ச்சியில் அதன் தலைவராக இருந்த முன்னாள் யாழ் நபர முதல்வரும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியுமான திரு.சு.செ மனாதேவா அவர்களின் காத்திரமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். வழிபடுவோரால் தெரிவு செய்யப்படும் தலைவர் நிர்வாக முகாமையாளராக செயற்பட்டமை கோயில் வளர்ச்சியில் வழிபடுவோரின் பங்களிப்பை மேலும் உற்சாகப்படுத்தியது. இதல் பயனாக பரிவார மூர்த்திகளின் பிரதிஷ்டைகள் இடம்பெற்றன. வைரவ சுவாமி கோயில், மணிக்கூட்டுக் கோபுரம் முதலியன அமைக்கப்பட்டன. வசந்த மண்டபம், பிரகாரங்கள், கூரைகள் திருத்தியமைக்கப்பட்டன. நாளடைவில் இவ்வாலயம் ”அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலயம்” என வழங்கலாயிற்று.

1966 இல் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. 1976 சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டதோடு தற்போது மூல மூர்த்தியாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மகாமாரி அம்மன் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகமும் நிறைவேறியது. 1984 இல் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு பெரு வளர்ச்சி கண்டது.

1988 இல் திருக்கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அம்பாள் திருவருளால் இனிது நிறைவேறியுள்ளது. இவ் இராஜ கோபுரத்திற்கு 05.04.1999 திங்கள் காலை 09.15 – 10.30 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நிறைவேறியது.

கோபுர தர்சனம்

Thumb
இராஜ கோபுரத்தின் கம்பீரத் தோற்றம்

இந்து சமயக் கலை மரபுகள் திருக்கோயில்களில் பெருமளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் எனப் பல்வேறு வடிவங்களில் கலையின் அம்சங்களைத் திருக்கோவில்களில் கண்டு நாம் மகிழ்கின்றோம்.

திருக்கோவில்கள் வழிபாட்டிற்குரிய இடம் மாத்திரமன்றி கலைத்திறன்களை வளர்க்கும் பொது இடமாகவும் விளங்கி சவருகின்றன. கோவில்களால் கலைகள் வளர்ந்ததாகவும், கலைகளால் கோவில்கள் வளர்ந்ததாகவும் ஒரு பொதுவான முடிவை நாம் ஏற்க முடியும்.

கோவில் வழிபாட்டிற்கு மிகவும் பிரதானமானது இறைவனின் திருவுருவங்களாகும். இத்திருவுருவங்களை அமைக்கும் கலை விக்கிரகக் கலை எனப்படும். இத்திருவுருவங்களை நிறுவுவதற்கு தேவைப்படும் ஆலயத்தை அமைக்கும் கலை கட்டடக்கலை எனப்படும்.

கட்டடக்கலையில் அதிகமான உயரத்தை பிடித்திருப்பது கோபுரம் கட்டும் கலையாகும். மூலாலயத்தில் உள்ள திருவுருவம் முதல் திருக்கோபுரம் வரையுள்ள அனைத்திடங்களும் கலை வடிவமாக இருப்பது தான் இச்சமயத்தின் தனிச்சிறப்பாகும்.

கோயில்களில் நடைபெறும் கிரியைகள், அங்கு ஓதப்படும் வேத மந்திரங்கள், திருமுறைகள், முழங்கும் மங்கள வாத்தியங்கள், மணியோசைகள் முதலிய யாவும் இசைக்கலை, நடனக்கலைக்கு ஆதாரமாக இருப்பவை என்பது தெளிவாகும். இவ்வாறு இறைவனும் கோவிலும் கலை வடிவமாக இருப்பதை உணரலாம்.

திருக்கோவிலில் காணப்படும் கட்டடங்களும் மணிக்கூட்டுக் கோபுரம், விமானம், இராஸகோபுரம் என்பன உயரமானவையாகக் காணப்படும். இவற்றைவிட ஈலயத்தின் நடுவில் காணப்படும் கொடிமரமும் உயரமாக இருக்கும். எங்கும் பரவியுள்ள இறைவனின் திருவருளை ஆலயத்திற்குள் வரவழைக்கும் பணியில் இவ் உயர்ந்த கட்டடங்களுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.

இவ் உயர்ந்த கட்டடங்கள் வெறும் கட்டடங்களாக மாத்திரம் காட்சியளிக்கப் பயன்படவில்லை. சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்து நிற்கின்றன.

இறைவனை  நோக்கி எமது மனம் உயரவேண்டும் என்ற அரும்பெரும் தத்துவத்தைக் கோபுர தரிசனம் எடுத்துக் காட்டுகிறது. அடியில் அகலமாக இருந்து படிப்படியாக ஒடுங்கிக் கொண்டு போவது கோபுர அமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமாகும்.

அதி உயரத்திலிருந்து விமானத்தையோ, கோபுரத்தையோ எவர் பார்த்தவுடன் வணங்குகின்றானோ அவனுக்கு பாம்பானது தனது செட்டையிலிருந்து விடுபடுவதுபோல சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் எனச் சுப்பிரபேதாகமம் கூறுகின்றது.

எமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக் கோபுர அமைப்பிற்கு ஒத்ததாக அவ் அமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். எமது சக்திக்கு மேற்பட்டவன் இறைவன் என்பதையும், அவனை அடைவதற்கு எமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுவது திருக்கோபுர ஒடுக்கமாகும்.

ஓர் ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு துாரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவு துாரமும் கைலாசப் பிரதேசம் எனப் போற்றப்படும். இதனால் தென்னாட்டில் பல மன்னர்கள் திருக்கோயில்களில் மிக உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள்.

”கோபுர தர்சனம் கோடி புண்ணியம்”, ”கோபுர தர்சனம் பாப விமோசனம்” போன்ற வசனங்கள் கோபுர தர்சனத்தால் எமது ஆண்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது.

கோபுரத்தை கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற செய்தியைப் பெரிய புராண பாடல் வரி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

” நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து

நெடுந் திருவீதியை வணங்கி……………

எனவே கோபுர தர்சனம் ஒவ்வொரு மனிதனும் கண்டு வணங்க வேண்டியது அவசியமாகும்.

கோவில் இல்லாத ஊர் அடவி காடு என அப்பர் சுவாமிகள் எடுத்துரைத்தார். திருக்கோவில் இல்லாத ஊர் எவ்வளவு செல்வம் பொருந்திய ஊராக இருந்தாலும் திருவில் ஊரே எனவும் அப்பர் சுவாமிகள் மேலும் கூறினார்.

ஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும் என்ற நிலையில் பல ஆலயங்களில் கோபுரம் அமைக்கும் பணி பரவி வருவதைக்  காணலாம்.

…….. கோலக் கோபுரக் கோகரணஞ் ஞழா

கால்களாற் பயனென் ” எனவும் அப்பர் சுவாமிகள் கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார். ”கோலக் கோபுரம்” என அப்பர் சுவாமிகள் குறிப்பிடுவதிலிருந்து கலை அம்சம் பொருந்திய சிறப்பினை நாம் கோபுர தர்சனத்தில் காணலாம்.

கோபுரங்களில் 3, 5, 7, 9, 11 என்ற வகையில“ மாடங்கள் இருக்கும். இதகால் கோபுரங்களை நெடுமாடம் எனவும் அழைக்கலாம்.

வானலாவிய உயர்ந்த மாடம் உடைய திருமருகல் தலத்தைப் பற்றிச் சம்பந்த சுவாமிகள் தமது திருமுறை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.

…………………மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய

மைந்த சொல்லாய்…………..” என வரும் பாடலில் சந்திரனைத் தொடக்கூடிய அளவிற்கு உயரமுடைய மாடம் என்பது அவரது வர்ணணையாகும்.

கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமுமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நுால்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தன்த்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நுால் அறிவுறுத்துகிறது.

பொதுவாக ஒரு சில கோவில்களைத் தவிர இலங்கையில் உள்ள கோவில்கள் யாவும் இரண்டு வீதிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மூன்று முதல் ஏழு வரையான வீதிகள் உள்ளன. ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோணில், சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.

Remove ads

அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய உற்சவங்களும், திருவிழாக்களும்

1) சித்திரை மாதம் சங்கிராந்தி தீர்த்தம் - அபிஷேகமும் வெளிவீதித் திருவிழாவும் புரணை - அபிஷேகமும் உள்வீதித் திருவிழாவும் சதுர்த்தி - அபிஷேகம் கார்த்திகை - அபிஷேகம் சித்திரைக் கதை - அபிஷேகமும் கதை படிப்பும்

2) வைகாசி மாதம் சங்கிராந்தி - அபிஷேகம் புரணை - அபிஷேகமும் உள்வீதித் திருவிழாவும் சதுர்த்தி - அபிஷேகம் கார்த்திகை - அபிஷேகம் வைகாசி விசாகம் - அம்மனுக்கு அபிஷேகம்

3) ஆனி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - உத்தரம் - இலட்சார்ச்சனை -

4) ஆடி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - வருடாந்த மஹோற்சவம் - ஆடிப்புர விழா -

5) ஆவணிமாதம் சங்கிராந்தி - புரணை - விநாயகர் சதுர்த்தி - கார்த்திகை - வரலட்சுமி புசை -

6) புரட்டாதி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - நவராத்திரி - விஜயதசமி - நவசக்தி அர்ச்சனை -

7) ஐப்பசி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - தீபாவளி - கற்தசஷ்டி - ஐப்பசி வெள்ளி - கேதாரகொரி விரதம் -

8) கார்த்திகை மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - கார்த்திகை - சர்வாலய தீபம் - கார்த்திகைத்திங்கள் -

9) மார்கழி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - ஆங்கில வருடப்பிறப்பு - திருவெம்பாவை - விநாயகர்ஷட்டி -

10) தை மாதம் சங்கிராந்தி தீர்த்தம் - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - தைப்பொங்கல் - குளிர்த்தி - தைப்புசம் - அபிராமிப்பட்டர் விழா - 1008 சங்காபிஷேகம் -

11) மாசி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - மகா சிவராத்திரி - மாசி மகம் -

12) பங்குனி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - உத்தரம் - பங்குனித்திங்கள் - பங்குனித்திங்கள் - பங்குனி அபிஷேகம் - 108 சங்காபிஷேகம் - குளிர்த்தி -


வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads