அலிகார் வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

அலிகார் வானூர்தி நிலையம்
Remove ads

அலிகார் வானூர்தி நிலையம் (Aligarh Airport)(IATA: HRH, ICAO: VIAH) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அலிகார் நகரின் புறநகரில் அலிகார்-சிக்கந்திர ராவ் சாலையில் அமைந்துள்ள ஓர் உள்நாட்டு வானூர்தி நிலையமாகும்.[2] தற்போதுள்ள அரசாங்கம் வானூர்தி ஓடுதளத்தை மேம்படுத்துவதன் மூலம் இது உருவாக்கப்பட்டு வருகிறது.[3][2]

விரைவான உண்மைகள் அலிகார் வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
Remove ads

முதல் கட்டம்

அலிகார், தனிபூரில் உள்ள அலிகார் வானூர்தி நிலையம் மார்ச் 2024-இல் கட்டி முடிக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளிலேயே வானூர்தி பயணத்திற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 19 இருக்கைகள் கொண்ட வானூர்தியினை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.[4]

இரண்டாம் கட்டமாக 19 இருக்கைகள் கொண்ட வானூர்தி இலக்னோவிலிருந்து அலிகார் வரை 2024 மார்ச் 11 அன்று தொடங்கியது.[5]

அலிகார் மற்றும் இலக்னோ இடையே வானூர்திப் பயணத்தைத் தொடங்கும்போது, அலிகார் முதல் கான்பூர், அலிகாரிலிருந்து ஆசம்கர் மற்றும் பிற இடங்களுக்குப் பயணம் தொடங்குவதற்கான அறிகுறிகள் இருந்தன. அலிகாரிலிருந்து வானூர்திகளை இயக்கும் வானூர்தி நிறுவனம், இதே நிறுவனத்தின் மட்டத்தில் முதலில் அலிகாரில் முதல் ஆசம்கர் வரை பயணத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Remove ads

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டத்தில், 90 இருக்கைகள் கொண்ட வானூர்திகள் மூலம் பிற நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மிகப்பெரிய வானூர்திகளான ஏர்பஸ்-320 மற்றும் போயிங்-737 கூட இங்குத் தரையிறங்க முடியும். இந்த வானூர்தி நிலையம் பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது. 3. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஓடுபாதை அமைக்க 675 ஏக்கர் நிலம் வேண்டும் என்று வானூர்தி நிலைய ஆணையம் கோரியுள்ளது. இதில், சுமார் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 376 ஏக்கர் நிலம் கையகம் செய்யப்பட்டு வருகிறது.[4]

Remove ads

புள்ளிவிவரங்கள்

மேலதிகத் தகவல்கள் மாதம், பயணிகள் ...

வானூர்திகள்

அனைத்து வானூர்தி பயணங்களும், தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads