அழகர் கோயில் தேரோட்டம்

From Wikipedia, the free encyclopedia

அழகர் கோயில் தேரோட்டம்
Remove ads

அழகர் கோயில் தேரோட்டம் மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோயிலில் நடைபெறும் புகழ் பெற்ற தேரோட்டமாகும்.

Thumb
மதுரை அழகர்கோயிலின் புதிய தேர்

புதிய தேர்

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மண்ணுக்குள் புதையுண்டிருந்த குளம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சரிந்திருந்த படிக்கட்டுகள் சரிசெய்யப்பட்டன. அப்போது 400 ஆண்டுகள் பழமையான கோயில் தேரையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேரை வடிவமைக்கும் பணி தொடங்கியது. [1]

அமைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 15 பேர் கொண்ட தச்சர்கள் குழுவினர் தேரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பர்மாவிலிருந்து முதல் தர தேக்கும், வேங்கை மரமும் வரவழைக்கப்பட்டது.பழைய தேரின் அழகும், அளவும் மாறாமல் அப்படியே செய்யப்பட்டது. [1]

  • உயரம் : 5 நிலைகளுடன், 51 அடி உயரம்
  • எடை : 62 டன்
  • சிம்மாசனம் வரையில் உயரம் : 22 அடி
  • கும்பம் வரையில் உயரம் : 51 அடி

சிற்பங்கள்

இத்தேரில் கீழ்ப்பகுதியில் 162 சுவாமி சிற்பங்கள், மேல் பகுதியில் 62 கலைச்சிற்பங்கள் என்று பின்வருவன உள்ளிட்ட சுமார் 400 சிற்பங்கள் அமைந்துள்ளன.[1]

வெள்ளோட்டம்

மதுரை அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் ஜூலை 6, 2015 திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னதாக சுந்தரராஜ பெருமாளிடம் அனுமதி கேட்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. பின்னர் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அழகான வண்ணமயமான தோரண மாலைகளும், தொங்கு தோரணத் திரைச்சீலைகளும் தேரின் நான்கு திசைகளிலும் அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தன. தேரில் சுவாமி எழுந்தருளும் இடத்தில் கல்கண்டு நிரம்பிய கும்பகலசம் அமைக்கப்பட்டது. கோயில் யானை முன் செல்ல, காலை 9.50 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. [2]

Remove ads

தேரோட்டம்

ஜூலை 31, 2015 அன்று தேரோட்டம் [2] சிறப்பாக நடைபெற்றது. பெருமாளே படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட, திருமாலிருஞ்சோலை மலையின் பின்னணியில் தேர் அசைந்து வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. [1] காலை 5.45 மணிக்கு, மேள தாளம் முழங்க புதிய தேரில் அழகர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். யானை கம்பீரமாக முன்னே சென்றது. காலை 7.15 மணிக்கு தேரின் வடத்தைப் பிடித்து பக்தர்கள் இழுக்க ஆரம்பித்தனர். எங்குப் பார்த்தாலும் கோவிந்தா என்ற கோஷம் முழங்கியது. தேர் நான்கு கோட்டை வாசல்களை கடந்து, காலை 9.25மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தது. அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் : அழகர்கோயிலில் நேற்று ஆடித்தேரோட்ட விழா நடந்தது. ஆடிப்பௌர்ணமி நாளன்று நடைபெற்ற இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். [3]

Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads