ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கேரளம் மாநிலத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Remove ads

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (APJ Abdul Kalam Technological University or Kerala Technological University) என்பது இந்தியா மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு மாநில பொதுத்துறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய விண்வெளி விஞ்ஞானியுமான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக 2015ஆம் ஆண்டு அன்று இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] இப்பல்கலைக்கழகத்துடன் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைவுப் பெற்றுள்ளன.[3] இக்கல்லூரிகள் கேரளாவின் 14 மாவட்டங்களில் பரவியுள்ளன. இது ஒப்பீட்டளவில் புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும்.[3][4]

விரைவான உண்மைகள் Tamil, Malayalam ...
Remove ads

வரலாறு

கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழம், 21 மே 2014 அன்று ஓர் அரசாணை மூலம் கேரள அரசால் நிறுவப்பட்டது.[5] அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளரான குஞ்செரியா பி. ஐசக், 1 செப்டம்பர் 2014 அன்று இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரான எம். அப்துல் இரகுமான், முதல் சார்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6] இப்பல்கலைக்கழகத்தின் முதல் கல்வித் தொகுதிக்கான வகுப்புகள் 1 ஆகத்து 2015 அன்று தொடங்கியது.[3]

Remove ads

கல்வி

இப்பல்கலைகழகம் வழங்கும் கல்வியின் பயிற்று மொழி ஆங்கிலம். இப்பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட நிலைகளில் பொறியியலில் பின்வரும் பாடங்களை வழங்குகிறது.[7]

இளநிலை தொழில்நுட்பவியல்

  • தொழில்நுட்பம் (பி.டெக்)
  • கட்டிடக்கலை
  • வடிவமைப்பு
  • தொழிற்கல்வி
  • உணவக மேலாண்மையும் உணவாக்கத் தொழில்நுட்பமும்

முதுநிலை தொழில்நுட்பவியல்

  • தொழில்நுட்பம்
  • கட்டிடக்கலை
  • வணிக நிர்வாகவியல்
  • கணினி பயன்பாடு

முனைவர் திட்டம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads