2015
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 (MMXV) கிரெகோரியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு, இவ்வாண்டைப் பன்னாட்டு ஒளி ஆண்டாகவும், பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும் நியமித்தது.[1]
Remove ads
முக்கிய நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1 - உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்ஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து "இயுரேசிய பொருளாதார ஒன்றியம்" என்ற அரசியல், பொருளாதார அமைப்பைத் தோற்றுவித்தனர்.
- சனவரி 1 - லிதுவேனியா லித்தாசு நாணயத்துக்குப் பதிலாக ஐரோவை ஏற்றுக் கொண்டது.[2]
- சனவரி 3-7 - 2015 பாகாப் படுகொலை: நைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் 2,000 இற்கும் அதிகமானோரைப் படுகொலை செய்தனர்.[3][4]
- சனவரி 9 - இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்று புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
- சனவரி 14 - யோசேப்பு வாஸ் அடிகள் கொழும்பு நகரில் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். (ஃபெர்ஸ்ட்போஸ்ட்)
- சனவரி 22 - எமனில் ஊத்தி படையினர் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்கிக் கைப்பற்றினர். அரசுத்தலைவர் பதவி துறந்தார்.[5]
- சனவரி 29 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போனமை ஒரு விபத்து என மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.(யூஎஸ்ஏ டுடே)
பெப்ரவரி
மார்ச்
- மார்ச் 5–8 - ஈராக்கின் பழம்பெரும் நகரங்களான நிம்ருத், ஆட்ரா, டுர்-சாருக்கின் ஆகியன இசுலாமிய அரசு போராளிகளால் தகர்க்கப்பட்டன.[7]
- மார்ச் 6 - நாசாவின் டோன் விண்கலம் சியரீசு குறுங்கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. குறுங்கோள் ஒன்றுக்குச் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.[8][9]
- மார்ச் 24 - **செருமன்விங்ஸ் விமானம் 9525: பார்செலோனாவில் இருந்து தியூசல்டோர்ஃபு சென்ற செருமனிய விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 150 பேரும் கொல்லப்பட்டனர்.[10]
ஏப்ரல்
- ஏப்ரல் 2 - கென்யாவின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய அல்-சபாப் தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர்.[11]
- ஏப்ரல் 25 - 2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 8,857 பேர் உயிரிழந்தனர், உலக பாரம்பரியக் களங்கள் பல அழிந்தன. இந்தியா, வங்காளதேசம், திபெத்துவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[12][13][14][15][16] with a total of 9,018 deaths.
மே
- மே 11 - சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- மே 11-12 - பாப்லோ பிக்காசோவின் அல்சீரியாவின் பெண்கள் என்ற ஓவியம் $179,365,000 இற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றிலேயே ஓவியம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகமான விலை இதுவாகும்.[17]
- மே 12 - நேபாளத்தில் 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 153 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் 62 பேர் உயிரிழந்தனர்.[18][19]
சூன்
சூலை

- சூலை 14 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக சென்றது.[21]
- சூலை 20 - 54 ஆண்டுகளுக்குப் பின்னர் கியூபாவும், அமெரிக்கா தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.[22]
ஆகத்து
- ஆகத்து 5 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: சூலை 29 இல் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் துண்டுகள் மலேசிய விமானத்தின் பாகங்களே என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் உறுதிப்படுத்தினார்.[23]
- ஆகத்து 17 - பேங்காக் நகரில் பிரம்மன் கோவிலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.[24]
செப்டம்பர்
- செப்டம்பர் 24 - 2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து: மக்கா நகரில் ஹஜ் பயணம் சென்றோர் 2,200 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
- செப்டம்பர் 28 - செவ்வாயில் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.[25]
- செப்டம்பர் 30 - இசுலாமிய அரசு போராளிகளுக்கு எதிராக சிரியாவில் வான்தாக்குதல்களை உருசியா ஆரம்பித்தது.
அக்டோபர்
- அக்டோபர் 26 - 2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்: 7.5 நிலநடுக்கத்தில் இந்து குஷ் பகுதியில் 398 பேரும்,[26] பாக்கித்தானின் 279 பேரும், இந்தியாவில் 4 பேரும் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 31 - சென் பீட்டர்ஸ்பேர்க் நோக்கிச் சென்ற மெட்ரோஜெட் விமானம் 9268 ஒன்று சிரியாவின் சினாய் மலைப்பகுதியில் வீழ்ந்ததில் அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர்.[27]
நவம்பர்
- நவம்பர் 13 - நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்: இசுலாமிய அரசு போராளிகள் பாரிசில் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.[28]
- நவம்பர் 24 - சிரிய உள்நாட்டுப் போர்: உருசியாவின் போர் விமானம் ஒன்று துருக்கியினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.[29]
டிசம்பர்
- டிசம்பர் 22 - எசுபேசுஎக்சு நிறுவனத்தின் மீளப் பாவிக்கக்கூடிய பால்கன் 9 ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்டது.[30]
Remove ads
இறப்புகள்
- சனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)
- சனவரி 23 - அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)
- சனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
- சனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
- பெப்ரவரி 4 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)
- பெப்ரவரி 5 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1933)
- பெப்ரவரி 24 - ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
- பெப்ரவரி 25 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- மார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)
- மார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- மார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)
- மார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)
- மார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)
- மார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)
- மார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)
- மார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)
- ஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
- ஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)
- ஏப்ரல் 8 - நாகூர் அனிபா, பாடகர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)
- ஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)
- ஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- ஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
- ஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
- மே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.
- மே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)
- மே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)
- மே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)
- சூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)
- சூலை 27 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (பி. 1931)
- செப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)
- செப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)
- செப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்
- செப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)
- செப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
- செப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- அக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- அக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
- அக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)
- அக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
- அக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
- அக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)
- அக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)
- அக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)
- அக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)
- அக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- அக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- நவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
- நவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)
- நவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)
- நவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- நவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1929)
- நவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)
- நவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- நவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (பி. 1949)
- டிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- டிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- டிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- டிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- டிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
Remove ads
2015 நாட்காட்டி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads