ஆகாஷ் விஜய்வர்கியா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆகாஷ் விஜய்வர்கியா (Akash Vijayvargiya) மத்தியப் பிரதேசத்தின் இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[2] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், ஆகாஷ் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவருமான அஷ்வின் ஜோஷியை 5700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.[3] இவர் 'தேவ் சே மகாதேவ்' என்ற ஆன்மீக ஊக்க புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ராம்தேவ் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மூத்த மகன் ஆவார்.[4]

விரைவான உண்மைகள் ஆகாஷ் விஜய்வர்கியா, சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம் ...
Remove ads

சர்ச்சைகள்

26 ஜூன் 2019 அன்று, அரசு ஊழியர் ஒருவரை துடுப்பாட்ட மட்டையால் அடித்ததற்காக இவர் செய்திகளில் இடம் பெற்றார். இது இவரது சொந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.[5] காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இவர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads