ஆக்கஸ் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆக்கசு (AUKUS அல்லது Aukus) என்படும் ஆத்திரேலியா (A), ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பிற்காக 15 செப்டம்பர் 2021 அன்று செய்து கொள்ளப்பட்ட இராணுவக் கூட்டணி ஒப்பந்தம் ஆகும்.[1][2][3][4]பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இந்த உடன்பாட்டின் சிறப்பம்சம் ஆகும்.
இந்தக் கட்டுரை அல்லது பகுதி கட்டற்ற மூலத்திலிருந்து, https://www.bbc.com/tamil/global-58592765 நெருங்கிய பொழிப்புரையைக் கொண்டுள்ளது. இக்கட்டுரை விடயம் மூலத்திலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலதிக விடயம் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. (செப்டம்பர் 2021) |
ஆக்கஸ் திட்டப்படி, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் இராணுவப் பாதுகாப்பிற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், ஐக்கிய இராச்சியமும் அணுசக்தியால் இயகும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் வழங்கும்.[5]
ஆக்க்ஸ் திட்டத்திற்கான கூட்டு அறிவிப்பில் வேறு நாடுகளை இத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து குறிப்பிடவில்லை. இருப்பினும் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளவே ஆக்சஸ் திட்டம் உருவாக்கப்பட்டது எனக்கூறப்பட்டுள்ளது[6]
ஆக்கஸ் திட்டத்தின் படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உளவுத் தகவல்கள், சைபர் பாதுகாப்பு, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், நீண்ட தூரம் எறியப்படும் ஏவுகணைகள், கடலடி பாதுகப்பை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும், மேலும் திட்டம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நலன்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகளின் உளவுத் துறைகளும் இத்திடத்திற்கு உளவு வேலைகள் பார்க்கும்.[7]
Remove ads
அக்கஸ் திட்டத்தின் செயல்பாடுகள்
ஆக்கஸ் திட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட உள்ளது. இதனை கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க உள்ளது. ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads