இந்தோ பசிபிக்

புவியன் கடல் பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia

இந்தோ பசிபிக்
Remove ads

இந்தோ-பசிபிக் (Indo-Pacific) என்பதை சில நேரங்களில் இந்தோ-மேற்கு பசிபிக் அல்லது இந்தோ-பசிபிக் ஆசியா என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியின் பெருங்கடல்களின் ஒரு உயிரியல் புவியியல் பகுதியாகும். இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடல்களை உள்ளடக்கியது. இந்தோனேசியா இந்த இரு பெருங்கடலைகளை ஒன்றிணைக்கும் பொதுவான பகுதி ஆகும். இந்தோ-பசிபிக் பகுதி துருவப் பகுதிகளையோ அல்லது அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையோரத்தில் வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியையோ உள்ளடக்கவில்லை. இது ஒரு தனித்துவமான கடல் மண்டலமாகும். இந்தோ-பசிபிக் கடல் மண்டலம் கடல்சார் உயிரியல், மீனியல் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்ய பயனுள்ளதாக உள்ளது. ஏனெனில் பல கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் மேற்கே மடகாஸ்கரிலிருந்து, கிழக்கே ஜப்பான் மற்றும் ஓசியானியா வரை தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிரினங்கள் அந்த வரம்பில் வாழ்கிறது. இப்பகுதியில் விதிவிலக்காக உயர் வகை கடல்சார் உயிரினங்கள் செழுமையாக உள்ளது.

Thumb
இந்தோ-பசிபிக்கின் கடல் உயிரிப் புவியியல் பகுதியைக் காட்டும் வரைபடம்

இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் 3,000 வகை மீன் இனங்களும், 1,200 வகை பவளப் பாறைகள் உள்ளது. ஆனால் மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 1200 வகை மீன் இனங்களும் மற்றும் 50 வகையான பவளப் பாறைகள் மட்டுமே உள்ளது.[1]

Remove ads

இந்தோ-பசிபிக்கின் உட்பிரிவுகள்

இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு இந்தோ-பசிபிக் பகுதிகளை மூன்று பகுதிகளாக (அல்லது துணைப் பகுதிகளாக) பிரிக்கிறது. மேலும் இவை ஒவ்வொன்றும் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மத்திய இந்தோ-பசிபிக் பிராந்தியம்

மத்திய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள (சுமத்திராவின் வடமேற்கு கடல் பகுதி தவிர்த்த) தென்சீனக் கடல், பிலிப்பைன் கடல், ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல் பகுதி, நியூ கினி, மைக்குரோனீசியா, நியூ கலிடோனியா, சொலமன் தீவுகள், வனுவாட்டு, பிஜி மற்றும் தொங்கா தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதிகளும், நீரிணைகளும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுடன் இணைகிறது. இரு பெருங்கடல்களுக்கு இடையே இந்த மத்திய இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியம் பவளப் பாறைகளாலும், அலையாத்தித் தாவரங்களாலும் செழிப்பாக உள்ளது.

கிழக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியம்

கிழக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியம், மத்திய பசிபிக் பெருங்கடலின் எரிமலை தீவுகளைக் கொண்டது. இது மார்ஷல் தீவுகளிலிருந்து மத்திய மற்றும் தென்கிழக்கு பொலினீசியா வழியாக ஈஸ்டர் தீவு மற்றும் ஹவாய் வரை நீண்டுள்ளது.

மேற்கு இந்தோ-பசிபிக் பிராந்தியம்

மேற்கு இந்திய-பசிபிக் பிராந்தியம் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் இப்பிராந்தியத்தில் மாலைத்தீவுகள் மடகாஸ்கர், சீசெல்சு, கொமோரோஸ் தீவுகள், மஸ்கரேன் தீவுகள் மற்றும் சாகோஸ் தீவுக்கூட்டம் போன்ற சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளது.

Remove ads

சூழலியல்

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியங்களில் பிசோனியா கிராண்டிஸ், கலோஃபில்லம் இனோஃபில்லம், ஹீலியோட்ரோபியம் ஆர்போரியம், பாண்டனஸ் டெக்டோரியஸ், கோர்டியா சப் கோர்டேட்டா, கெட்டார்டா ஸ்பெசிஸா மற்றும் புதர்கள் ஸ்கேவோலா டக்கடா, சூரியனா மரிடிலா, மற்றும் பெம்பிஸ் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த தாவரங்கள் பவளப் பாறை மணற்பரப்பை தழுவி வளர்கிறது. மேலும் உப்பு நீரை தாங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் விதைகள் உள்ளன. இதில் கடற் பறவைகள் உப்பு நீரில் மிதந்து உயிர்வாழ முடியும்.[2] தென்னை, கேண்டலினட் (அலூரிட்ஸ் மொலுக்கனஸ்) மற்றும் மொரிண்டா சிட்ரிபோலியா ஆகிய மரங்கள் மத்திய இந்தோ-பசிபிக் பகுதியில் தோன்றியது. மேலும் இப்பகுதி முழுவதும் மனிதக் குடியேற்றவாசிகளால் பரவியுள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads