ஆங் துவா கிராமம்
மலாக்கா, கம்போங் டூயோங், கிராமப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆங் துவா கிராமம் (ஆங்கிலம்: Hang Tuah Village; மலாய்: Perkampungan Hang Tuah; சீனம்: 汉都亚村) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகருக்கு அருகில் கம்போங் டூயோங் (Kampung Duyong) அமைந்துள்ள ஒரு கிராமப் பகுதியாகும்.
இந்தக் கிராமம் 9 ஆகஸ்டு 2013-இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு ஆங் துவா மையம், ஆங் துவா கிணறு, மலாய் பாரம்பரிய உடைகள் மற்றும் பாத்திக் ஆடை ஆபரணங்களின் காட்சியகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.[1][2]
Remove ads
பொது
10.4 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் கிராமம் 15-ஆம் நூற்றாண்டில் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சியின் போது மலாக்காவில் வாழ்ந்த ஒரு போர்வீரரின் நினைவாக உருவாக்கப்பட்ட கிராமம் ஆகும்.[3][4]
செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய மரபு நூலின்படி, அவர் ஒரு சிறந்த கடல் தளபதி; ஓர் அரசதந்திரி; மற்றும் சிலாட் எனும் மலாய் தற்காப்புத் துறையின் விற்பனர் என்றும் கூறப்படுகிறது.
ஆங் துவா மலாய் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராக அறியப்படுகிறார். மலாக்கா புராணக் கதைகளின் படி, ஆங் துவா தம் நான்கு தோழர்களான ஆங் கஸ்தூரி, ஆங் ஜெபாட், ஆங் லெக்கிர் மற்றும் ஆங் லெக்கியூ ஆகியோருடன் மலாக்காவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை ஆசிரியரிடம் சீலாட் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டதாக அறிஅயப்படுகிறது [5]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads