ஆச்சார்யா கிரிசு சந்திர போசு கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி (Acharya Girish Chandra Bose College) முன்பு பங்கபாசி வணிகக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது, 1964இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட ஓர் இளநிலை கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி 2011ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் 'பி' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.
Remove ads
கல்லூரியின் வரலாறு
கிரிசு சந்திரபோசு 1885இல் பங்கபாசி பள்ளி மற்றும் 1887இல் பங்கபாசி கல்லூரி என இரண்டு கல்வி நிறுவனங்களை நிறுவினார். இவை 1964-1965இல் பங்கபாசி காலை நேரக் கல்லூரி, பங்கபாசி மாலை கல்லூரி மற்றும் பங்கபாசி வணிகக் கல்லூரி என மறுசீரமைக்கப்பட்டன.[2] பங்கபாசி வணிகக் கல்லூரி 2005ஆம் ஆண்டில் பங்கபாசி கல்லூரியின் நிறுவனர் பெயரில் மறுபெயரிடப்பட்டது.[3]
துறைகள்
கலை மற்றும் வணிகம்
- வங்காள மொழி
- ஆங்கிலம்
- சமசுகிருதம்
- வணிகம்-கணக்கியல் மற்றும் நிதி
அங்கீகாரம்
ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads