ஆனந்த் (நடிகர்)

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆனந்த் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முக்கியமாகவும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஆனந்த், பிறப்பு ...

இன்றுவரை இவரின் மிகப் பெரிய படமாக மணிரத்னத்தின் அவல நகைச்சுவைத் திரைப்படமான திருடா திருடா உள்ளது. ஆனால் அந்த படத்தில் அவருடன் நடித் நடிகர்களைப் போலல்லாமல், அது இவருக்கு திருப்புமுனையை வழங்கத் தவறிவிட்டது. கமல்ஹாசனின் சத்யா மற்றும் விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[1]

Remove ads

தொழில்

1987 ஆம் ஆண்டில் இவர் வண்ணக் கனவுகள் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2][3] இவர் சத்யா (1988), அன்பே என் அன்பே (1988), அபூர்வா சகோதரர்கள் (1989), ஊர் மரியாதை (1992), தலைவாசல் (1992), திருடா திருடா (1993), எனக்கு 20 உனக்கு 18 (2003) போன்ற படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.[4][5]

ஆனந்த் மலையாள குறும்படமான ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பதை தயாரித்து இயக்கியுள்ளார்.[6][7] இவர் குணச்சித்திர நடிகராக அண்மையில் நடித்த படைப்புகளில் 1: நேனோகாடின் (2014), ரிங் மாஸ்டர் (2014), இவன் மரியாதராமன் (2015), ஸ்ரீமந்துடு (2015), ஜெண்டில்மேன் (2016) போன்ற வெற்றிப் படங்கள் அடங்கும்.[8]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

ஆனந்த் ஐதராபாத்தில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை வி. எஸ். பாரதி, புரூக் பாண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார், இவரது தாயார் ராஜலட்சுமி குடும்பத் தலைவி. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிதி துணைத் தலைவரான பி. ரமேஷ், விவேகானந்தா கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான டாக்டர் பி. சுரேஷ், முன்னாள் இந்திய துடுப்பட்ட வீரரும் இப்போது இந்திய துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான பாரத் அருண் ஆகியோர் இவரது சகோதரர்கள். திருவனந்தபுரத்தில் ஜென்செரோ என்ற உணவகத்தையும் ஆனந்த் வைத்திருக்கிறார்.[6] [7]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

ஆனந்த் நடிகை பூர்ணிமாவை 2009இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி என்ற மகன் உண்டு.

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

தொலைக்காட்சி தொடர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads