ஆமுக்தமால்யதா

கிருஷ்ணதேவராயன் எழுதிய நூல் From Wikipedia, the free encyclopedia

ஆமுக்தமால்யதா
Remove ads


ஆமுக்தமால்யதா (Amuktamalyada) (தெலுங்கு: ఆముక్తమాల్యద) என்பது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் இயற்றிய தெலுங்கு மொழிக் காவியக் கவிதை நூலாகும். ஆமுக்தமால்யதா எனும் தெலுங்கு மொழிச் சொல்லிற்கு "மாலையை அணிந்து அதை வழங்கியவர்" (சூடிக்கொடுத்த சுடர்கொடி) எனபது பொருளாகும்.

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

இக்கவிதைக் காவியம் ஆண்டாள், திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமாள் மீது கொண்ட பக்தியையும், மையலையும் கூறுவதுடன், இறுதியில் திருவரங்கப் பெருமானுக்கும், ஆண்டாளுக்கும் நடைபெற்ற திருமண விழாவைப் புகழ்ந்து பாடும், இந்நூல் தெலுங்கு மொழியின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது. [1]

Remove ads

படைப்பு

கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகாகுளம் கிராமத்தில் (இன்றைய கிருஷ்ணா மாவட்டம்) ஏகாதசி விரதத்தில் மன்னர் கிருஷ்ணதேவராய இருந்தபோது, அவரது கனவில் தோன்றிய ஸ்ரீகாகுல ஆந்திர மகா விஷ்ணு தோன்றி திருவரங்கத்தில் அரங்கநாதர்-ஆண்டாளின் திருமணக் கதையை தெலுங்கில் எழுதுமாறு அவருக்கு அறிவுறுதியதாகக் கூறப்படுகிறது.

ஆண்டாளின் வாழ்க்கையை விளக்கும் விதமாக இந்த நூல் உள்ளது. விஷ்ணுவின் துணைவியான இலட்சுமியின் அவதாரமாக விவரிக்கப்படும் ஆண்டாள் அனுபவித்த பிரிவின் வலியை (விரகம்) அமுக்தமால்யாதா விவரிக்கிறது. இந்த கவிதை ஆண்டாளின் அழகை உச்சிமுதல் பாதம் வரையில் 30 பாடல்களில் விவரிக்கிறது.[2][3][4]


Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads