ஆரோக்ய ராஜீவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரோக்கியா ராச்சீவ் (Arokia Rajiv) 400 மீட்டர் தூர ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய தடகள வீர்ராவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் கலப்பு 4 × 400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2014 இல் 400 மீட்டர் தனிநபர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், 2017 ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகள் இரண்டிலும் 400 மீ மற்றும் 4 × 400 மீ இரண்டிலும் பதக்கங்களை வென்றார். 2016 கோடைகால ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் போட்டியிட்டார் [1].
Remove ads
பிறப்பு
ஆரோக்ய ராஜீவ் இந்தியாவின் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் இலால்குடியைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை திருச்சி, இலால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,கல்லூரிப் படிப்பை புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி யிலும் பயின்றார்.
விளையாட்டு
ராஜீவ் தனது இளமைக் காலத்தில் நீளம் தாண்டுதலில் ஆர்வம் காட்டினார். பின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தினார்.[1] 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில், இவர் 4 வது இடத்தைப் பிடித்தார், இறுதிப் போட்டியில் 45.37 வினாடிகள் எடுத்தார்.[2] இது 2014 செப்டம்பர் 28 அன்று இஞ்சியோனில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் சாதித்ததபோது, எடுத்த நேரமான 45.92 வினாடிகளை விட சிறந்தது.[3] 2011 மார்ச் 15 அன்று இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் 8 வது பட்டாலியனில் சேர்ந்தார். சுபேதார் அரோக்கியா ராஜீவ் 2017 ஆம் ஆண்டில் தடகளத்தில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அளித்து இவரை கௌரவித்தார். இந்தியாவின் கால்பந்து கோல்கீப்பராக செய்த சிறந்த சாதனைகளுக்காக விருது பெற்ற ஹவில்தார் பீட்டர் தங்கராஜுக்குப் அடுத்து மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இருந்து இரண்டாவதாக அர்ஜுனா விருது பெற்றவராக ராஜீவ் உள்ளார்.[4]
Remove ads
சாதனைகள்
1 இறுதிப் போட்டியில் ஓடி முடிக்கவில்லை
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
