இ. இரவிக்குமார்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இ. இரவிக்குமார் (E. Ravikumar, இறப்பு:26, பெப்ரவரி, 2014) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவள்ளுவர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இரவிக்குமார் சென்னை மணலி புதுநகர் அருகே நாப்பாளையம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தார். 1991ஆம்[2] ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவள்ளுவர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். கட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தார்.[3]

2014 பெப்ரவரி 26 அன்று இவர் ஒட்டிச் சென்ற மகிழுந்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தார். உடன் பயணித்த அவரது மனைவி நிர்மலா படுகாயம் அடைந்தார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads