தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் நடை பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1]
Remove ads
தொகுதிகள்
1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
அரசியல் நிலவரம்
- 1987 ஆம் ஆண்டு முதல்வர் எம். ஜி. ஆர் இறந்த பிறகு அவரது அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு அவரது மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி தனியாக செயல்பட்டு வந்ததையடுத்து.
- 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜானகி அணி பெரும் தோல்வி அடைந்ததால். ஜெயலலிதா அணியுடன் இணைந்தது.
- பின்பு வி. என். ஜானகி ராமச்சந்திரன் அரசியலிருந்து ஓய்வு பெற்று கொண்டதால். ஜெயலலிதா தலைமையில் பறிக்கப்பட்ட அதிமுகவின் அதிகார பூர்வமான தேர்தல் சின்னம் இரட்டை இலை சின்னத்தை முடக்கபட்டதை. மீண்டும் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெரும் உதவியால் மீட்கப்பட்டு ஜெயலலிதா அதிமுகவின் அதிகார பூர்வமான தலைவரானார்.
- பின் நடைபெற்ற 1989 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்தார்.
- முந்தைய திமுக ஆட்சியில் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்ற மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆன காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும், சமூக நீதி சார்ந்த பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது
- இலங்கைக்கு ஈழதமிழற்களுக்கு இடையூறாக இருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெறப்பட்டது.
- மத்தியில் கூட்டணியில் இருந்து பிரதமர் வி. பி. சிங் அவர்களால் தமிழ்நாடு–கர்நாடகம் இடையேயான காவேரி நீர் பிரச்சனைக்கு காவேரி நடுவர் மன்றம் வி. பி. சிங்–மு. கருணாநிதி அவர்களது கூட்டு முயற்சியால் எடுக்கப்பட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்களுக்கு மேரினா கடற்கரையில் முழுமையான பராமரிப்பற்றிருந்த அவரது சமாதிக்கு எதிர்கட்சி தலைவர் என்றும் பாராமல் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் பெரும் சீரமைப்பு செய்யப்பட்டு அழகான பளிங்கி கற்களால் வெளிநாட்டு தொழில்நுட்ப பொறியாளர்களை வைத்து அழகு செய்தார்.
- பின்பு அவரது சமாதிக்கு முன்பகுதியில் எம்ஜிஆருக்கு ஒரு சிலை வைத்தார்.
- அவரது நினைவாக எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யா போக்குவரத்து பேருந்து கழகம் என்ற பெயரில் அரசு பேருந்துகள் மு. கருணாநிதி அவர்களால் இயக்கபட்டது.
- கடந்த திமுக ஆட்சி காலத்தில் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்துரிமை இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக கையாண்டு இருந்தார்.
- மத்தியில் மண்டல் கமிஷன் பரிந்துரையை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மு. கருணாநிதி அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பரிமலை கள்ளர், வன்னியர் உட்பிரிவினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கினார்.
- அதே போல் அப்போது இலங்கை போர்கால இடையூறுகளை காரணம் காட்டி தமிழகம் வந்த ஈழத்தமிழ்ற்களை சிங்கள வெள்ளாளர் என்ற இனப்பெயருடன் அவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கபட்டு இட ஒதுக்கீட்டிலும் முன்னுரிமை வழங்கினார்.
- விவசாயிகளுக்கு மோட்டார் ஒரு மின்விளக்கு பொருத்தப்பட்டு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.
- பின்பு 1989 நாடாளமன்ற தேர்தலில் மத்தியில் வெற்றி பெற்ற ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தபோது வி. பி. சிங் அவர்கள் கொண்டுவந்த மண்டல் கமிஷன் பரிந்துரையின் போது அதன் கூட்டணியிலிருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானியிடம் பரிந்துரை செய்யாமலும் அவர் அப்போது வடநாட்டில் நடத்திய ராமா் யாத்திரையை எதிர்த்ததாலும். ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால். 12 மாதங்களில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்தது.
- பின்பு நாடாளமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சந்திரசேகர் வெற்றி பெற்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பேராதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பாக சந்திரசேகர் இடைக்கால பிரதமரானார். ஆனால் சிறிது காலத்திலேயே காங்கிரசில் ராஜீவ் காந்தியும் அக்கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால். மத்தியிலும் ஆட்சி கலைக்கபட்டு 1991 ஆம் ஆண்டு நாடாளமன்றத் தேர்தலை சந்தித்தது.
- மேலும் சந்திரசேகரின் ஆட்சியின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டது என்று காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுகவும் மற்றும் அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர்.
- அதனால் சூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். எப் தலைவர் பத்மநாபா எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசாமி தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார்.
- இதனால் ஜனவரி 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனபடுத்தபட்டு சூன் 1991ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழக ஆளுநர் ஒப்புதல் இல்லாமல். ஆட்சி கலைப்பு சட்டம் 356ல் அதர்வைஸ் முதல் முறையாக பயன்படுத்தி குடியரசு தலைவரே நேரடியாக ஆட்சியை கலைத்தார்.[3][4][5][6][7][8][9]
Remove ads
ராஜீவ் காந்தி படுகொலை
- மே 21 1991 இல் தமிழகத்தில் நாடாளமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் கட்சி தலைவரும் அப்போதைய முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் ஶ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் இந்திய தேசிய காங்கிரசு-அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே பெரும் அனுதாப அலையின் ஆதரவு கிட்டியது. இதனால் அதிமுகவில் எம். ஜி. ஆர்க்கு பிறகு அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- மேலும் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் 1987ல் நடந்த ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா ஆகிய இருநாட்டு பிரதமர்களுக்கு இடையே நடந்த இலங்கை தமிழர் ஒப்பந்தம் மற்றும் அதன் பிறகு இந்திய இராணுவத்தை கொண்டு ஈழதமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடத்தியது.
- மேலும் பிரபாகரனின் பெரும் கொரிக்கையான தமிழீழம் தனிநாடு கொள்கைக்கு எதிராக ராஜீவ் காந்தி செயல்பட்டதால். பிரபாகரன் தனது விடுதலைப் புலிகள் அமைப்பில் சிலருக்கு தற்கொலை படையாக 1990ன் பிற்பகுதியில் பயிற்சி அளித்து வந்ததாகவும் அவர்களை வைத்து ஏவி ராஜீவ் காந்தியை கொன்றார் என்றும் கூறப்படுகிறது.
- ஆனால் ஒரு பக்கம் இலங்கை தனிநாடு பிரிவினையை ஏற்காத சிங்கள அரசாங்கமும், ராஜீவ் காந்தி மீண்டும் இந்திய பிரதமர் ஆகினால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு பிரிவினை ஏற்படும் என்ற பகை உணர்வால் தற்கொலை படையை சிங்கள அரசாங்கமே ஏவி கொன்றது என கூறப்படுகிறது.
- மேலும் திமுக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் புகழிடம் கொடுத்த நெருக்கமான கட்சியாக இருந்துவந்தது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களின் ஆட்சியை 1991 ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் மறைமுகமாக ஆதரவு அளிப்பதை காரணம் காட்டி அவரது திமுக ஆட்சியை எதிர்கட்சியில் அதிமுக தலைவி ஜெயலலிதா அவர்கள் தனது கூட்டணியில் உள்ள மத்திய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் உதவியால் அன்றைய பிரதமர் சந்திரசேகருக்கு பலமான அழுத்தம் கொடுக்கபட்டு தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
- இதனால் தனது ஆட்சியை கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சி நிரல்களை மத்திய அரசாங்கத்தின் ரகசியங்களை உளவு செய்து விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று காரணம் காட்டப்பட்டது. இதனால் கருணாநிதியின் மீது தவறான காரணங்கள் பரவலாக மக்களிடையே காணபட்டதால் திமுக மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
Remove ads
கட்சிகளின் நிலவரம்
- அதிமுக ஜே-ஜா அணிகள் ஒன்றிணைந்த போது அதில் சேராமல் இருந்த சு. திருநாவுக்கரசர், கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், கருப்புசாமி பாண்டியன், உகம்சந்த் முதலிய அதிமுக தலைவர்கள் திமுகவிலிருந்து பிரிந்த நடிகர் டி. ராஜேந்தர் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 1980 களில், வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க 1987 ம் ஆண்டு வன்னியர் போராட்டம் நடத்திய வன்னியர் ஜாதி சங்கம், டாக்டர் ராமதாசின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
Remove ads
கூட்டணிகள்
- இத்தேர்தலில் அதிமுக-காங்கிரஸ், இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) கட்சி ஒரு அணியாகவும்.
- திமுக-ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணியில் திமுக-ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டி. ராஜேந்திரனின் தாயக மறுமலர்ச்சிக் கழகம் எதிர் அணியில் போட்டியிட்டன.
- பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
- மேலும் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய காங்கிரஸ் (சமதர்மம்) கட்சி வேட்பாளர் சஞ்சய் ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.[10][11]
Remove ads
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 24 சூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.[10]
Remove ads
ஆட்சி அமைப்பு
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads