இட்டாநகர்

அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமும் ஓர் மாநகராட்சியும் ஆகும். From Wikipedia, the free encyclopedia

Remove ads

இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது பபும் பரே மாவட்டத்தில் உள்ள இட்டாநகர் தலைநகர வலாயத்தில் அமைந்துள்ளது.[1] இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் இட்டாநகர் இட்டா நகரம், நாடு ...

15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இயற்கை வளம் கொண்ட இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.[2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads