இட்ரியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்ரியம்(III) நைட்ரேட்டு (Yttrium(III) nitrate) என்பது Y(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறுநீரேற்றான இச்சேர்மம் வர்த்தக முறையில் மிகப்பொதுவாகக் கிடைக்கிறது.
Remove ads
தயாரிப்பு
தொடர்புடைய உலோக ஆக்சைடை 6 மோல்/லிட்டர் நைட்ரிக் அமிலத்தில் கரைத்து இட்ரியம்(III) நைட்ரேட்டை தயாரிக்க முடியும் :[1]
- Y2O3 + 6 HNO3 → 2 Y(NO3)3 + 3 H2O.
பண்புகள்
மிகத் தாழ்வான வெப்பநிலையில் இட்ரியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று படிகமாக்கப்பட்ட நீரை இழக்கிறது. தொடர்ந்து அதை சூடாக்கும்போது அடிப்படை உப்பான YONO3 உருவாகிறது [2]. 600 பாகை வெப்பநிலையில் இந்த வெப்பசிதைவு நிறைவு அடைந்து இறுதியாக Y2O3 உருவாகிறது [3]. டிரைபியூட்டைல் பாசுபேட்டு ஒரு பிரித்தெடுக்கும் கரைப்பானாக பயன்படுத்தும் போது Y(NO3)3•3 டிரைபியூட்டைல் பாசுபேட்டு உருவாகிறது [4].
பயன்கள்
Y3+ நேர்மின் அயனியை தயாரிக்க உதவும் மூலமாக இட்ரியம்(III) நைட்ரேட்டு பிரதானமாகப் பயன்படுகிறது. Y4Al2O9 [3] YBa2Cu3O6.5+x [2] போன்ற சில இட்ரியம் சேர்ந்துள்ள சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. மேலும் இட்ரியம் அடிப்படையிலான உலோக கரிமக் கட்டமைப்புகள் உருவாக்கவும் இது பயனாகிறது [5]. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையூக்கியாகவும் இட்ரியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது [6].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads