இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) Indian Congress (Socialist) என்பது 1978 முதல் 1986 வரை இந்தியா இருந்த ஒரு அரசியல் கட்சியாகும். இந்திய தேசிய காங்கிரசில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (உர்சு) என்று அழைக்கப்பட்டது, இதற்கு டி. தேவராசு உர்சு தலைமை தாங்கினார். 1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1978 இல் தனது தாய்க் கட்சியிலிருந்து பிரிந்தது இந்திய தேசிய காங்கிரசு (உர்சு).

விரைவான உண்மைகள் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்), சுருக்கக்குறி ...

இந்திய தேசிய காங்கிரசில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர்கள் ஏ. கே. ஆண்டனி, சரத் பவார், தேவ் காந்த் பாருவா, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, சரத் சந்திர சின்ஹா, கே. பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் முகமது யூனுஸ் சலீம் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசு (உர்சு) கட்சிக்கு சென்றனர்.

1981 அக்டோபரில் சரத் பவார் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றபோது, கட்சியின் பெயர் இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) என்று மாற்றப்பட்டது.[1][2]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads