இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகளின் பட்டியல் (List of Indian National Congress breakaway parties) என்பது 1947-ல் இந்தியா விடுதலைப் பெற்றதிலிருந்து, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் தொடர்ந்து பிளவுகள் மற்றும் பிரிந்து செல்லும் நிகழ்வுகளினால் உருவான பல்வேறு கட்சிகளின் பட்டியல் ஆகும். பிரிந்து சென்ற சில அமைப்புகள் சுயேச்சைக் கட்சிகளாக வளர்ந்துள்ளன. சில செயலிழந்துவிட்டன மற்றவை தாய்க் கட்சி அல்லது பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ளன.
Remove ads
பிரிந்த கட்சிகள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, கட்சி ...
ஆண்டு | கட்சி | தலைவர் | பகுதி | நிலை |
---|---|---|---|---|
1923 | சுயாட்சிக் கட்சி | சித்தரஞ்சன் தாஸ் மோதிலால் நேரு |
வங்காள மாகாணம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1939 | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு[1] | சர்துல் சிங் கவிசர் ஷீல் பத்ரா யாகீ சுபாஷ் சந்திர போஸ் |
தேசிய அளவில் | செயலில் |
1951 | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி[2] | ஆச்சார்ய கிருபளானி | மைசூர் மாநிலம் சென்னை மாநிலம் தில்லி விந்தியப் பிரதேசம் |
செயலில் இல்லைபிரஜா சோசலிச கட்சிடன் இணைந்தது |
1951 | ஐதராபாத் மாநில பிரஜா கட்சி | த. பிரகாசம் கொகினேனி ரங்க நாயுகுலு |
ஐதராபாத் இராச்சியம் | செயலில் இல்லை
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி உடன் இணைக்கப்பட்டது |
1951 | சௌராட்டிர கேதுத் சங்கம் | நரசிங்கபாய் தாதானியா
ரதிபாய் உகாபாய் |
சௌராஷ்டிர மாநிலம் | செயலில் இல்லை சுதந்திராக் கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1956 | இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு[3] | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | சென்னை மாநிலம் | செயலில் இல்லை சுதந்திராக் கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1959 | சுதந்திராக் கட்சி[4] | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி கொகினேனி ரங்க நாயுகுலு |
பீகார்இராசத்தான் குசராத்து ஒடிசா |
செயலில் இல்லை பாரதிய கிரந்தி தளம் கட்சியுடன் 1974-ல் இணைக்கப்பட்டது |
1964 | கேரள காங்கிரசு[5] | கே. எம். ஜோர்ஜ் | கேரளம் | கேரள காங்கிரஸ் (எம்), கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), கேரள காங்கிரஸ் (பி), கேரள காங்கிரஸ் (ஜனநாயக), கேரள காங்கிரஸ் (ஸ்காரியா தாமஸ்), கேரள காங்கிரஸ் (தாமஸ்),, கேரள காங்கிரஸ் (தேசியவாதி) எனப் பல பிரிவுகளாக உள்ளது |
1966 | ஒரிசா மக்கள் காங்கிரசு | ஹரேகிருஷ்ணா மகதாப் | ஒடிசா | செயலில் இல்லை ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1967 | பங்களா காங்கிரசு | அஜய் முகர்ஜி | மேற்கு வங்காளம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1967 | விசால் அரியானா கட்சி | பீரேந்தர் சிங் | அரியானா | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1967 | பாரதிய கிரந்தி காங்கிரசு[6][7] | சரண் சிங் | உத்தரப் பிரதேசம் | செயலில் இல்லை பாரதிய லோக் தளம் கட்சியுடன் இணைந்தது |
1968 | மணிப்பூர் மக்கள் கட்சி[8] | முகமது அலிமுதீன் | மணிப்பூர் | செயலில் |
1969 | இந்திரா காங்கிரசு | இந்திரா காந்தி | தேசியம் | 1971 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தால் இந்திய தேசிய காங்கிரசு அங்கீகரிக்கப்பட்டது. எந்த பின்னொட்டும் இல்லாமல் தன்னை இந்திய தேசிய காங்கிரசு என்று அழைக்க கட்சி அனுமதிக்கப்பட்டது இரண்டு காளைகளின் காங்கிரஸ் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் மீட்டெடுத்தது. ஆனால், இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் 1969 பிளவுக்குப் பிறகு ஏற்றுக்கொண்ட “கன்று மற்றும் பசு” சின்னத்தை விரும்பினர் மற்றும் “ஆர்” என்ற பின்னொட்டை கைவிட்டனர். |
1969 | நிறுவன காங்கிரசு[9] | காமராசர் மொரார்ஜி தேசாய் |
தேசியம் | செயலில் இல்லை ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1969 | உத்கல் காங்கிரசு | பிஜு பட்நாயக் | ஒடிசா | செயலில் இல்லை ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1969 | தெலுங்கானா பிரஜா சமிதி | மாரி சன்னா ரெட்டி | ஆந்திரப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1971 | பிப்லோபி பங்களா காங்கிரஸ் | சுகுமார் ராய் | மேற்கு வங்காளம் | இடது முன்னணி (இந்தியா) கூட்டணி |
1977 | ஜனநாயகத்திற்கான காங்கிரசு[10] | ஜெகசீவன்ராம் | தேசியம் | செயலில் இல்லை ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது |
1978 | இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) | இந்திரா காந்தி | தேசியம் | 1981-ல் இந்திய தேசிய காங்கிரசாக அங்கீகரிக்கப்பட்டது |
1979 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | தேவராஜா அரசு | கருநாடகம் கேரளம் மகாராட்டிரம் கோவா |
செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசு (சோசலிஸ்ட்) |
1980 | காங்கிரசு (அ) | அ. கு. ஆன்டனி | கேரளம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1981 | இந்திய தேசிய காங்கிரசு (சோசலிஸ்ட்)[11] | சரத் பவார் | கருநாடகம் கேரளம் மகாராட்டிரம் கோவா |
செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1981 | இந்தியத் தேசிய காங்கிரசு (ஜெகசீவன்ராம்)[11] | ஜெகசீவன்ராம் | பீகார் | செயலில் இல்லை |
1984 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) - சரத் சந்திர சின்ஹா[12] | சரத் சந்திர சின்ஹா | அசாம் | செயலில் பெருன்பான்மையானவர்கள் Nationalist Congress Party சேர்ந்தனர்.கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா) கூட்டணி |
1986 | ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரசு | பிரணப் முகர்ஜி | மேற்கு வங்காளம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1988 | தமிழக முன்னேற்ற முன்னணி | சிவாஜி கணேசன் | தமிழ்நாடு | செயலில் இல்லை அன்றைய பிரதமர் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்தது. |
1990 | அரியானா முன்னேற்றக் கட்சி | பன்சிலால் | அரியானா | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது (2004-ல்) |
1994 | அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)[13] | நா. த. திவாரி அர்ஜுன் சிங் கே. |
உத்தரப்பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1994 | கர்நாடக காங்கிரசு கட்சி | சாரெகொப்பா பங்காரப்பா | கருநாடகம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1994 | தமிழக இராஜிவ் காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி | தமிழ்நாடு | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1996 | கர்நாடக விகாசு கட்சி | சாரெகொப்பா பங்காரப்பா | கருநாடகம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1996 | அருணாச்சல காங்கிரசு | கேகோங்க் அபாங்க் | அருணாசலப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1996
2014 |
தமிழ் மாநில காங்கிரசு[14] | ஜி. கே. மூப்பனார் 1996-2001
ஜி. கே. வாசன் (2014–முதல்) |
தமிழ்நாடு | செயலில்
இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது (2001-ல்) |
1996 | மத்திய பிரதேச விகாசு காங்கிரசு | மாதவ்ராவ் சிந்தியா | மத்தியப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1997 | தமிழ்நாடு மக்கள் காங்கிரசு | வாழப்பாடி ராமமூர்த்தி | தமிழ்நாடு | செயலில் இல்லை |
1997 | இமாச்சல் விகாசு காங்கிரசு | சுக்ராம் | இமாச்சலப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1997 | மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி[15] | வாஹெங்பாம் நிபாமாச்சா சிங் | மணிப்பூர் | செயலில் இல்லை இராச்டிரிய ஜனதா தளம் இணைந்தது |
1998 | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | மம்தா பானர்ஜி | மேற்கு வங்காளம் | activeleft the alliance with INC |
1998 | கோவா ராஜீவ் காங்கிரசு கட்சி | பிரான்சிஸ் டி சோசா | கோவா | செயலில் இல்லை தேசியவாத காங்கிரசு கட்சியுடன் இணைந்தது |
1998 | அருணாச்சல காங்கிரசு (மித்தி) | முகுத் மிதி | அருணாசலப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1998 | அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு[16] | சிசு ராம் ஓலா | அருணாசலப் பிரதேசம் | செயலில் இல்லைஇந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1998 | மகாராட்டிரா விகாசு அகாதி[17] | சுரேஷ் கல்மாடி | மகாராட்டிரம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
1999 | பாரதிய ஜன காங்கிரசு | ஜெகந்நாத் மிஸ்ரா | பீகார் | செயலில் இல்லை தேசியவாத காங்கிரசு கட்சியுடன் இணைந்தது |
1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | சரத் பவார் பி. ஏ. சங்மா தாரிக் அன்வர் |
மகாராட்டிரம் மேகாலயா பீகார் கேரளம் |
இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது கேரளாவில் இந்திய பொதுவுடமைக் கட்சியுடன் கூட்டணி |
1999 | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | முப்தி முகமது சயீத் | சம்மு காசுமீர் மாநிலம் | செயலில் |
2000 | கோவா மக்கள் காங்கிரசு | பிரான்சிஸ்கோ சர்தின்ஹா | கோவா | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2001 | காங்கிரசு சனநாயகப் பேரவை | ப. சிதம்பரம் | தமிழ்நாடு | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2001 | தொண்டர் காங்கிரசு | குமரி அனந்தன் | தமிழ்நாடு | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2001 | பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசு | பி.கண்ணன் | புதுச்சேரி | செயலில் இல்லை |
2002 | விதர்பா ஜனதா காங்கிரஸ் | ஜம்புவந்த்ராவ் தோத்தே | மகாராட்டிரம் | செயலில் |
2002 | இந்தியத் தேசிய காங்கிரசு (சேக் அசன்) | ஷேக் ஹாசன் | கோவா (மாநிலம்) | செயலில் இல்லை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது |
2002 | குசராத்து ஜனதா காங்கிரசு | சபில்தாசு மேத்தா | குசராத்து | செயலில் இல்லை தேசியவாத காங்கிரசு கட்சியுடன் இணைந்தது |
2003 | காங்கிரஸ் (டோலோ) | கமெங் டோலோ | அருணாசலப் பிரதேசம் | செயலில் இல்லை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது |
2003 | நாகாலாந்து மக்கள் முன்னணி | நைபியு ரியோ | நாகாலாந்து | செயலில் |
2005 | பாண்டிச்சேரி முன்னேற்ற காங்கிரசு | பி.கண்ணன் | ஆந்திரப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2005 | ஜனநாயக இந்திரா காங்கிரசு (கருணாகரன்)[18] | கே. கருணாகரன் | கேரளம் | செயலில் இல்லை தேசியவாத காங்கிரசு கட்சியுடன் இணைந்தது பெரும்பான்மையானவர்கள் கே. கருணாகரனுடன் காங்கிரசில் இணைந்தனர். கே. முரளிதரனும் பின்னர் இதேகா இணைந்தார் |
2007 | அரியானா ஜன்ஹித் காங்கிரசு | குல்தீப் பிஷ்னோய் | அரியானா | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2008 | பிரகதிஷீல் இந்திரா காங்கிரசு | சோமேந்திர நாத் மித்ரா | மேற்கு வங்காளம் | செயலில் இல்லை அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியுடன் இணைந்தது |
2011 | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ஜெகன் மோகன் ரெட்டி | ஆந்திரப் பிரதேசம் | செயலில் |
2011 | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | ந. ரங்கசாமி | ஆந்திரப் பிரதேசம் | செயலில் |
2014 | ஜெய் சமக்கியேந்திரா கட்சி | நல்லாரி கிரண் குமார் ரெட்டி | ஆந்திரப் பிரதேசம் | செயலில் இல்லை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது |
2016 | சத்தீசுகர் ஜனதா காங்கிரசு | அஜித் ஜோகி | சத்தீசுகர் | செயலில் |
2019 | மக்கள் முன்னேற்ற காங்கிரசு | பி. கண்ணன் | புதுச்சேரி | செயலில் இல்லை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது |
2021 | பஞ்சாப் லோக் காங்கிரசு | அமரிந்தர் சிங் | பஞ்சாப் (இந்தியா) | செயலில் இல்லை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது |
2022 | ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி | குலாம் நபி ஆசாத் | சம்மு காசுமீர் மாநிலம் | செயலில் |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads