இந்திய தேசிய ஆவணக்காப்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (National Archives of India) என்பது இந்திய அரசின் அலுவல்சாராத ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கின்ற இடம் ஆகும். இதுநிர்வாகிகள் மற்றும் அறிஞர்களின் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது. பிரித்தானிய இந்தியாவின் தலைநகரான கல்கத்தாவில் 1891 ஆம் ஆண்டில் இம்பீரியல் பதிவுத் துறையாக முதலில் நிறுவப்பட்ட தேசிய ஆவணக் காப்பகம் டெல்லியில் ஜன்பத் மற்றும் ராஜ்பத் சந்திப்பில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் பண்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் பண்பாட்டுத் துறையின் இணைக்கப்பட்ட அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.[1]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

வரலாறு

Thumb
இந்திய தேசிய ஆவணக்காப்பக புது தில்லி வளாகம்
Thumb
இந்திய தேசிய ஆவணக் காப்பகம், புது தில்லி

இம்பீரியல் பதிவுத் துறை மார்ச் 11, 1891 ஆம் நாளன்று கல்கத்தாவில் (கொல்கத்தா) அமைக்கப்பட்டது. ஜி.டபிள்யூ ஃபாரஸ்ட் என்பவர் அதன் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] 1911 ஆம் ஆண்டில் இது புதிய தலைநகரான புது தில்லிக்கு மாற்றப்பட்டது, 1926 ஆம் ஆண்டில் அது அதன் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. கட்டிடக் கலைஞர் எட்வின் லுடியன்ஸ் என்பவரால் நகரத் திட்டத்தில் கிங்ஸ் வே மற்றும் குயின்ஸ் வே சந்திப்பில் 'பாயிண்ட் பி' ஐச் சுற்றி திட்டமிடப்பட்ட நான்கு அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகக் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். இருந்த போதிலும், இந்த ஒரு கட்டடம் மட்டுமே அப்போது கட்டப்பட்டது. இது நியோ-கிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். முதலில் இது இம்பீரியல் ரெக்கார்ட் அலுவலகம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

அப்போதைய இந்திய ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீ கே.ஆர்.நாராயணன், தேசிய ஆவணக்காப்பகத்தின் அருங்காட்சியகத்தை ஜூலை 6, 1998 ஆம் நாளன்று பொது மக்களுக்காகத் திறந்து வைப்பதாக அறிவித்தார். இந்த அருங்காட்சியகம் தேசிய ஆவணக்காப்பகத்தின் பன்முக இருப்புக்கள் பற்றிய ஒரு பிரதிநிதித்துவ கண்ணோட்டத்தை வழங்குகிறது, மேலும் ஆவணக்காப்பக இருப்புக்களில் ஒரு சாதாரண மனிதனின் ஆர்வத்தை ஊக்குவிக்கின்ற வகையில் இது அமைந்துள்ளது.

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் போபாலில் ஒரு பிராந்திய அலுவலகத்தையும், புவனேஸ்வர், ஜெய்ப்பூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மூன்று பதிவு மையங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Remove ads

ஆவணங்கள்

Thumb
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தில் 'அபிலேக்-படால்', 2015 இன் பதிவுகளின் ஆன்லைன் தேடல் போர்ட்டலைத் தொடங்கும் விழா

தேசிய காப்பகங்களில் உள்ள இருப்புகள் 1748 ஆம் ஆண்டு முதல் உள்ளவையாக அமைந்துள்ளன. இங்கு உள்ள ஆவணங்கள் ஆங்கிலம், அரபு, இந்தி, பாரசீகம், சமஸ்கிருதம், மோடி மற்றும் உருது உள்ளிட்ட மொழிகளில் அமைந்துள்ளன. அவை காகிதம், பனை ஓலை, பிர்ச் பட்டை மற்றும் காகிதத்தோல் ஆகிய பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டவையாக அமைந்துள்ளன. இங்குள்ள பதிவுகள் பொது ஆவணங்கள், ஓரியண்டல் பதிவுகள்,, கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தனியார் ஆவணங்கள் என நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவுகளைப் பாதுகாப்பதிலும் கையாளுதலிலும் அக்கறை செலுத்தப்படாதது குறித்து ஒரு குறிப்பிட்ட அளவிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.[3][4]

Remove ads

கண்காட்சிகள்

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் தொடர்ந்து கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அவற்றுள் சுபாஷ் சந்திர போஸின் தடைநீக்கக்கோப்புகள் (2016), ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த 70ஆது ஆண்டினைக் குறிக்கும் வகையில் அமைந்த "ஜம்மு காஷ்மீர் சாகா" போன்றவை அடங்கும்.ஜம்மு காஷ்மீர் சாகா 10 ஜனவரி 2018 ஆம் நாள் முதல் 10 பிப்ரவரி 2018 ஆம் நாள் வரை நடைபெற்றது.[5][6][7] 1973 ஆம் ஆண்டிற்கும்2015 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்திய தேசிய ஆவணக் காப்பகம் பல்வேறு கருப்பொருள்களில் 108 கண்காட்சிகளை நடத்தியுள்ளது.[8]

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads