இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய அணு சக்தித்துறை 1971 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து தெற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கல்பாக்கதில் ஒரு அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவியது. 1985 ஆம் ஆண்டில் இந்த ஆராய்ச்சி மையத்தின் பெயரை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என மாற்றியமைத்தார்கள். இந்த மையம் ஒரு முதன்மை அணு ஆராய்ச்சி மையமாக விளங்குவதுடன், நாட்டின் மின்சாரத் தேவைகளின் ஒரு பங்கை வழங்கும் ஒரு அணுமின் நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த மையத்தின் இயக்குநராக டாக்டர் பல்தேவ் ராஜ் செயல்பட்டு வருகிறார்.
Remove ads
வணிக ரீதியில் செயல்படும் அணு உலைகள்
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு 175 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வணிக ரீதியில் பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விரு உலைகளையும் இந்திய அணுமின் கழகம் இந்திய நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் நிறுவனம் நிருவாகம் செய்து வருகிறது.[1]
அணு ஆராய்ச்சி மையத்தில் செயல் படும் அணு உலைகள்
1. இங்கு இரு வேக ஈனுலைகள் (FBTR) செயல்படுகின்றன.[2] இவை நீர்ம உலோகம் சார்ந்தவையாகும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.[3]
2. கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை (கல்பாக்கம் மினி என்பதன் சுருக்கம்) யுரேனியம் 233 வகை தனிமத்தை எரிபொருளாகக் கொண்டு, இலேசான நீரைப் (light water) தடுப்பியாகப் பயன்படுத்தும் அணுக்கரு உலையாகும். இந்த உலை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், செயல் பகுப்பாய்வு சோதனைகளை புரிவதற்கும் பயன்படுகிறது. அணு உலை செய்முறை நடவடிக்கைகளுக்கும் பராமரிப்பதற்கும் ஒரு தனிக்குழு இதற்காக அமைக்கப் பெற்றுள்ளது.
Remove ads
உயர் தொழில்நுட்பக் கலன்
உயர் தொழில்நுட்பக் கலன் என்ற நூதனமான திட்டத்திற்காக[4] இந்திரா காந்தி ஆராய்ச்சி மைய வல்லுனர்கள் செயல்பட்டு, 100 மெகா வாட் மின்திறன் கொண்ட ஒரு அணு உலையை அமைத்து அதை நிலத்தில் சோதித்துப்பார்த்த பிறகு, அதனை இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த ஒருபுதிய நீர் மூழ்கிக் கப்பலில் பொருத்தி செயல்படுத்துவதில் வெற்றியும் கண்டார்கள்.[5]
விரிவாக்கத்திற்கான முதலுறு வேக உற்பத்தி உலை
யுரேனியம் 238 தனிமத்தை எரிபொருளாகக் கொண்டும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படும் 500 மெகா வாட் திறன் கொண்ட ஒரு முதலுறு வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor) வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதற்காக குறித்த காலம் வருவதற்கு முன்னரே இதை அவர்கள் செய்து முடித்தார்கள்.[6]
இங்கு கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் ஒன்றும் செயல்படுகிறது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads