கல்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

கல்பாக்கம்map
Remove ads

கல்பாக்கம் (ஆங்கிலம்:Kalpakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் இருந்து 70 கி.மீ. தெற்கே கோரமண்டல் கரையில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். கல்பாக்கம் பெரும்பாலும் அணு ஆலைகள் மற்றும் அதன் துணை ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் புகழ்பெற்றது.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

Thumb
நகரியத்தின் நிழற்சாலை

கடலோரம் அமைந்துள்ள இவ்வூரின் அமைவிடம் 12.56°N 80.16°E / 12.56; 80.16 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது.

முக்கிய இடங்கள்

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 1971 லும், சென்னை அணுமின் நிலையம் 1970 லும் அமைக்கப்பட்டது. இதிலுள்ள இரு அணு மின் நிலையங்களும் 1984 மற்றும் 1986 ஆண்டுகளில் தலா 220 மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் இயங்க துவங்கியது[4].

சுனாமி

Thumb
சுனாமியின் வேகத்தை குறைப்பதற்கான சுவர்

டிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பப்பட்டது. மேலும் பல மரங்களும் நடப்பட்டன.

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads