இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகம் (Indo-Portuguese Museum) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளத்தில் கோட்டை கொச்சியில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

வரலாறு

இந்த அருங்காட்சியகம் மறைந்த டாக்டர் ஜோசப் குரீத்ரா அவர்களின் முன்முயற்சிகளின் காரணமாக நிறுவப்பட்டது. போர்த்துகீசியம் செல்வாக்கு மற்றும் போர்த்துக்கீசிய பண்பாட்டினைக் காப்பாற்றும் நோக்கிலும், அதனை வெளிப்படுத்துகின்ற வகையிலும் கொச்சி பிஷப்பான குரீத்ரா இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார். தற்போது இந்த அருங்காட்சியகத்தில் கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக, கொச்சியின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்ற போர்த்துகீசிய தாக்கங்களைக் காண முடியும்.

Thumb
இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகத்திற்கு வெளியே பிஷப் மாளிகையில் பதினாறாம் போப் பெனடிக்ட்டின் படம்
Remove ads

சிறப்புகள்

கொச்சி பிஷப் இல்லத்தில் உள்ள அருங்காட்சியகம் பிற தேவாலயங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தோ-போர்த்துக்கீசிய கலைப்பொருள்களைக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்தில் இந்தோ-போர்த்துக்கீசிய மதிப்புமிக்க பாரம்பரியத்தையும், கலையையும், பண்பாட்டையும், கட்டடக்கலையும் இது காத்துவருகிறது. இந்தப் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தைப் பற்றிய பல கூறுகளை இந்த அருங்காட்சிகம் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் கொச்சி பிஷப்பான குரீத்ராவின் கனவாகவும், இலக்காகவும் இருந்தது. அவருடைய காலத்தில் அவர் இங்கு பிஷப்பாகப் பணியாற்றி வந்தார். இந்தோ-போர்த்துக்கீசிய கலை மற்றும் பண்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டுள்ள மையமாக இது இருந்து வருகிறது. ரோஸ் தெருவிலிருந்து சிறிய தூரத்தில் இது அமைந்துள்ளது. [1]

Remove ads

அம்சங்கள்

இந்த அருங்காட்சியகத்தில் பல முக்கியமான பிரிவுகள் உள்ளன: பலிபீடம், கருவூலம், ஊர்வலப்பாதை, குடிமக்கள் வாழ்வியல் மற்றும் பிரதான தேவாலயம் ஆகியவை முக்கியமான ஐந்து பிரிவுகள் உள்ளடக்கியது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களில் வைபீன் புனித மாதா தேவாலயத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தால் (16 ஆம் நூற்றாண்டு) செதுக்கபட்ட பலிபீடம், கோட்டை கொச்சியின் பிஷப் ஹவுசைச் சேர்ந்த புல் என்ற ஆடை (19 ஆம் நூற்றாண்டு), வெள்ளி மற்றும் மரத்தால் ஆன (17 ஆம் நூற்றாண்டு), ஊர்வலத்தின்போது எடுத்துச் செல்லப்படுகின்ற சிலுவை, கோட்டை கொச்சியின் பெருங்கோயிலைச் சேர்ந்த சாண்டா குரூஸ் வழங்கிய கொச்சி கோட்டையின் அதிகாரப்பூர்வ சிலுவை, வைப்பீன் தீவு சபுனித மாதா தேவாலயத்தைச் சேர்ந்த சேர்ந்த இந்தோ-போர்த்துகீசிய (18-19 ஆம் நூற்றாண்டு) தேவ அப்பக்கலம் ஆகியவை உள்ளன.

கலோஸ்டே குல்பென்கியன் அறக்கட்டளை இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகத்தில் சேகரிப்பிற்காக அதிக பங்களிப்பினைச் செய்துள்ளது. இங்கு சிற்பங்கள், விலைமதிப்பற்ற உலோக பொருள்கள் மற்றும் உடைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சியில் உள்ளவற்றில் சாண்டா குரூஸ் கதீட்ரல் மற்றும் கொச்சி மறைமாவட்டத்தின் பிற தேவாலயங்களைச் சேர்ந்தவையும் உள்ளன.

இங்குள்ள பிரான்சிஸ்கனின் கோட் ஆப் ஆம்ஸ் என்ற ஆடை மிகவும் புகழ் பெற்றதாகும். இங்குள்ள காட்சிப்பொருள்களில் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. [2]

இருப்பிடம்

அருங்காட்சியகம் கோட்டை கொச்சியில் பிஷப் இல்ல வளாகத்திற்குள் உள்ளே அமைந்துள்ளது. புவியியல் கூறுகள் 9°57′46.37″N 76°14′24.19″E

Remove ads

பார்வையாளர் நேரம்

இந்த அருங்காடசியகத்தை காலை 10:00 மணி முதல் மாலை 5.00 வரை பார்வையாளர்கள் பார்வையிடலாம். திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமறை நாள்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு விடுமுறை ஆகும். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிமை என்று இந்த அருங்காட்சியகத்தை கட்டணம் எதுவும் செலுத்தாமல் பார்வையிடலாம். [3]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads