இந்தோனேசியப் பல்கலைக்கழகம்

இந்தோனேஷியாவின் தெபோக்கில் உள்ள ஒரு அரச பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தோனேசியப் பல்கலைக்கழகம் (University of Indonesia) தெபோக், மேற்கு ஜாவா சலெம்பா, ஜகார்த்தா ஆகியவற்றில் வளாகங்களைக் கொண்ட இந்தோனேசியாவின் அரசப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தோனேசியாவில் பழமையான ஒரு மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமாகக் கொள்ளப்படுகின்றது. இந்தோனேசியப் பல்கலைக்கழகம், பண்டுங் தொழில் நுட்ப நிறுவனம், கட்சா மடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தோனேசியாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகக் கருதப்படுகிறது.[4][5][6]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தின் ஆரம்பம் 1851 இல் நடைபெற்றது. காலனித்துவகாலத்தில் டச்சு கிழக்கு இந்திய கம்பனி அரசு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. இரண்டாண்டுகள் நீடித்த பயிற்சியின் பின்னர, பட்டதாரிகள் அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பட்டதாரிகள் யாவானிய மருத்துவர்கள் என பட்டமளிக்கப்பட்டு டச்சு கிழக்கு இந்திய பகுதிகளில் குறிப்பாக ஜாவாவில் மட்டும் செயற்பட அனுமதி அளிக்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கப்பட்டு1864 இல் மூன்று ஆண்டுகளுக்குரிய பட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. 1875 இல் இக்கல்வித் திட்டம் ஏழு ஆண்டுகள் கொண்ட மருத்துவர் பட்டமாக மாற்றப்பட்டது.[7]

1898 ஆம் ஆண்டில் இது மற்றொரு வளர்ச்சியைக் கண்டது. டச்சு கிழக்கு இந்தியஅரசு வைத்தியர்களைப் பயிற்றுவிக்க மற்றொரு பாடசாலையைத் தொடங்கியது., இது STOVIA என அழைக்கப்பட்டது. ஒரு பள்ளி கட்டிடம், மார்ச் 1902-ல் திறந்துவக்கப்பட்டது. தர்போது இது தேசிய விழிப்புணர்வு அருங்காட்சியகம் உள்ளது என்று இக் கட்டிடத்திலே ஆகும். STOVIA க்கான நுழைவு தகுதி ஒரு உயர்நிலைப் பள்ளி டிப்புளோமாவுக்கு சமமாக உயர்வாயிருந்தது. பள்ளிப்படிப்பு ஒன்பது ஆண்டுகளாக அமைந்தது. அது உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. STOVIA பட்டதாரிகள் இந்தோனேஷியாவின் தேசிய முன்னேற்றத்திற்கும், மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், முக்கிய பங்களிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.[8]

1924-இல், காலனித்துவ அரசாங்கம் பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக, ஒரு புதிய மூன்றாம் நிலைக் கல்வி வசதியுடனான பள்ளியைத் திறந்தது. இது பின்னர் சட்ட பீடமாக உருவாகிறது. 1927 ஆம் ஆண்டில், STOVIA அந்தஸ்து ஒரு முழு மூன்றாம் நிலை நிலை நிறுவனமாக மாற்றப்பட்டது.[9]

1950 ஆம் ஆண்டில் இந்தோனேசியப் பல்கலைக்கழகம் ஒரு முழுமையான பல்கலைக் கழகமாக, ஜக்ர்த்தாவில் (மருத்துவம், சட்டம், மற்றும் இலக்கிய பீடம்), போகோரில் (பயிராக்கவியல் மற்றும் கால்நடை மருத்துவம்), பண்டுங்கில் (பொறியியல், கணிதம், இயற்கை அறிவியல்), சுரபாயவில் (மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்) என ஒரு பன்முக வளர்ச்சியடைந்தது. சுரபாய வளாகம் 1954-ல் ஏர்லாங்கா பல்கலைக்கழகம் ஆனது. அடுத்த ஆண்டில், பண்தங் வளாகம் கசானுடீன்பல்கலைக்கழகம் ஆனது. 1959 ஆம் ஆண்டில், பண்டுங் வளாகத்தில் பண்டுங் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads