இமாம்-உல்-ஹக்

பாக்கித்தான் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

இமாம்-உல்-ஹக்
Remove ads

இமாம்-உல்-ஹக் (Imam-ul-Haq Urdu: امام الحق  ; பிறப்பு 12 டிசம்பர் 1995) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் [1] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் அறிமுக ஆட்டத்தில் நூறு ஓட்டங்களை அடித்த இரண்டாவது பாக்கித்தான் வீரர் மற்றும் சர்வதேச அளவில் பதின்மூன்றாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[2] ஆகஸ்ட் 2018 இல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 2018–19 ஆண்டிற்கான மைய ஒப்பந்தத்தை வழங்கிய முப்பத்து மூன்று வீரர்களில் ஒருவராக இருந்தார்.[3][4]

Thumb
இமாம்-உல்-ஹக், 2017
Remove ads

உள்லூர் போட்டிகள்

2016–17 குவைத்-இ-அசாம் டிராபியின் இறுதிப் போட்டியில், ஹபீப் வங்கி லிமிடெட் அணி சார்பாக விளையாடிய இவர் 200 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.[5] 2017–18 தேசிய இருபது20 கோப்பைத் தொடரில் இவர் லாகூர் புளூஸ் அணி சார்பக விளையாடினார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இவர் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயாகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6]

Remove ads

சர்வதேச போட்டிகள்

அக்டோபர் 2017 இல், இலங்கைக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார்.[7] 18 அக்டோபர் 2017 அன்று இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே இவர் நூறு ஓட்டங்கள் அடித்தார். அந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். சலீம் எலாஹிக்கு அடுத்தபடியாக ஒருநாள் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் மட்டையாளர் ஆனார்.[8] மேலும் சர்வதேச அளவில் இந்தச் சாதனை புரிந்த 13 ஆவது வீரர் எனும் சாதனை படைத்தார்.

ஏப்ரல் 2018 இல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்ப யணங்களுக்காக பாகிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.அவர் 11 மே 2018 அன்று அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக பாகிஸ்தானுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[9][10] இந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் ஐம்பது ஒட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[11]

20 ஜூலை 2018 அன்று, ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அவரும் ஃபக்கர் ஜமானும் இணைந்து 304 ஓட்டங்களை எடுத்தனர்.இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த துவக்க இணை எனும் சாதனை படைத்தனர்.[12] அந்தப் போட்டியில் பாக்கித்தான் அனி ஓர் இழப்பிற்கு 399 ஓட்டங்களை எடுத்தது. இதுவே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[13] இந்த தொடரில் ஜமான் மற்றும் இமாம் இருவரும் சேர்ந்து 705 ரன்கள் எடுத்தனர், இது இருதரப்பு ஒருநாள் தொடரில் ஒரு துவக்க இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையாகும்.[14]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான இன்சாம்-உல்-ஹக்கின் மருமகன் ஆவார். அவர் தேசிய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.[15][16] ஹக் குடும்பம் முல்தானில் இருந்து வந்தது. அவர்களின் முன்னோர்கள் இன்றைய இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள ஹன்சி நகரத்திலிருந்து 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.[17]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads