இம்ரான் கெதவாலா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இம்ரான் கெதவாலா (Imran Khedawala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குசராத்து மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு முதல் இயமால்பூர்-காடியா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1]

இராசத்தானின் பாலியில் வேரூன்றிய கெதவாலாவின் முன்னோர்கள் அகமதாபாத்தை தங்கள் தாயகமாக்குவதற்கு முன்பு கெதா மாவட்டத்தில் குடியேறினர். ஐந்து உடன்பிறப்புகளில் இவர் இளையவர். திருமணமாகாத இவர் நெசவுத் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கெதவாலா 2001 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டில் அகமதாபாத் மாநகராட்சி பொதுத் தேர்தலில் இவருக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக்க மறுத்தது.. இதனால் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு இயமால் பூர் பகுதியில் வெற்றி பெற்றார். 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குசராத்து சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தனது நெருங்கிய போட்டியாளரும் முன்னாள் மாநில அமைச்சரவை அமைச்சரும் சபாநாயகருமான அசோக் பட்டின் மகனுமான பாரதிய சனதா கட்சி வேட்பாளரான பூசன் பட்டை இரண்டு முறையும் தோற்கடித்தார். [2] [3]

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் பரவியபோது, கெதவாலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டனர். இவர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [4] [5] [6] [7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads