இரகோத்தம தீர்த்தர்

இந்தியத் தத்துவவாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரகோத்தம தீர்த்தர் (Raghuttama Tirtha) ( அண். 1527 அண். 1595) இவர் ஓர் இந்திய தத்துவவாதியாகவும், அறிஞராகவும், இறையியல் அறிஞராகவும் துறவியாகவும் இருந்துள்ளார். இவர் பாவபோதாச்சார்யா என்றும் அழைக்கப்பட்டார். மத்துவர் மற்றும் ஜெயதீர்த்தரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் இவரது மாறுபட்ட சாயலில் அடங்கும். இவர் 1535-1595 வரை மத்வாச்சாரியரியன் உத்திராதி மடத்தின் பதினான்காம் தலைவராக இருந்தார். இவர் முப்பதொன்பது ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணிகளைக் கொண்டிருந்தார். [1] துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமான பார்வையாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். [2] தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]

விரைவான உண்மைகள் இரகோத்தம தீர்த்தர், பிறப்பு ...

ஒரு பிரபுத்துவ பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மடத்தில் வளர்க்கப்பட்டார். இவர் 11 படைப்புகளை இயற்றினார். மத்துவர், ஜெயதீர்த்தர் மற்றும் வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகளை பாவபோதனையின் வடிவத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறுகிறார். [1]

Remove ads

வாழ்க்கை

இவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் இவரது மடங்களின் (குரு பரம்பரை) வழியாகவே பெறப்பட்டுள்ளது. [1] இவர் கன்னட மொழி பேசும் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் இராமச்சந்திர பட்டாவாக 1527 இல் சுப்பா பட்டா மற்றும் கங்காபாய் ஆகியோருக்கு பிறந்தார். [4] இவரது தந்தை ஒரு ஜமீந்தார் என அறியப்படுகிறது. இவர் கர்நாடகாவின் பிஜப்பூர் மாவட்டத்தில் மானூர் என்ற பிறந்தார். இவர் தனது ஏழு வயதில் தனது உபநயனத்தை தரித்துக் கொண்டு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டார். [1] இவர் இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மானூரின் கற்றறிந்த பண்டிதரான ஆத்ய வரதராஜாச்சார்யாவின் கீழ் சில காலம் படித்ததாகக் கூறப்படுகிறது. [3]

Remove ads

படைப்புகள்

இவரது பத்து படைப்புகள் உள்ளன. அவற்றில் 9 படைப்புகள் மத்துவர், பத்மநாப தீர்த்தர் மற்றும் ஜெயதீர்த்தர் ஆகியோரின் படைப்புகள் பற்றிய விளக்கவுரைகளாகும். அவற்றில் ஐந்து படைப்புகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பவபோதனை என்பது இவரது பெரும்பான்மையான படைப்புகளின் பொதுவான தலைப்பாகும். இவர், பொதுவாக "பவபோதகர்" அல்லது "பாவபோதாச்சார்யா" என்று அழைக்கப்படுகிறார். [3] இவரது படைப்புகள் பிருகதாரண்யக பாவபோதனை என்பது மத்துவரின் பிருகதாரண்யக உபநிடத பாஷ்யம் பற்றிய வர்ணனையாகும். இது இவரது மகத்தான பணியாக கருதப்படுகிறது.[5]

Remove ads

மரபு

ஜெயதீர்த்தருக்குப் பிறகு, திகாச்சார்யர் அதாவது பாவபோதாச்சார்யர் என்று குறிப்பிடப்படுகிறார். [3] வரலாற்றாசிரியர் சர்மா எழுதுகிறார் "இவரது மொழி எளிமையானதாகவும், துல்லியமானதாகவும் உள்ளது. இவர் தனது கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறுகிறார். வேறு எந்த வர்ணனையாளரால் மேற்கோள் காட்டப்படாத சில அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து இவர் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்". [5] இவர் சாதி, மத வேறுபாடின்றி விஷ்ணுவின் வழிபாட்டை பிரசங்கிக்க அறியப்பட்ட ஒரு துறவியாக கருதப்படுகிறார். தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]

குறிப்புகள்

நூலியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads