இரண்டாம் பிரவரசேனன் (வத்சகுல்ம வம்சம்)

வாகாட மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் பிரவரசேனன் ( Pravarasena II ) ( ஆட்சிக்காலம் சுமார் 400 – 415 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் வத்சகுல்ம கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் விந்தியசேனனின் மகனும் வாரிசும் ஆவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் பிரவரசேனன், ஆட்சிக்காலம் ...

இவர் ஒப்பீட்டளவில் குறுகிய மற்றும் சீரற்ற ஆட்சியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இவர் சீக்கிரமே இறந்த காரணத்தல் இவரது எட்டு வயதுடைய மகன் ஆட்சிக்கு வந்தான்.[2] இந்த இளம் வாரிசு பற்றிய பெயர் தெரியவில்லை. ஏனெனில் இவரது பெயர் வாகாடக வம்சத்தின் பரம்பரையை வழங்கிய அஜந்தா கல்வெட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இல்லை. இருப்பினும், இரண்டாம் சர்வசேனன் இரண்டாம் பிரவரசேனனின் மகனும் வாரிசுமென இப்போது அறியப்படுகிறது. [3]

'தர்ம-மகாராஜா' என்ற பட்டத்தைப் பயன்படுத்திய இவரது புகழ்பெற்ற மூதாதையர்களைப் போலல்லாமல், இரண்டாம் பிரவரசேனன் 'மகாராஜா' என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். இதை இரண்டாம் சர்வசேனனும் தொடர்ந்தார்.[4]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads