இரத்தனகோசின் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

இரத்தனகோசின் இராச்சியம்
Remove ads

இரத்தனகோசின் இராச்சியம் (Rattanakosin Kingdom, தாய்: อาณาจักรรัตนโกสินทร์) என்பது தாய்லாந்து வரலாற்றில் அல்லது சியாமில் நான்காவதும், தற்போதைய தாய்லாந்தின் மரபுவழி ஆட்சி மையமும் ஆகும். இந்த இராச்சியம் பாங்காக்கைத் தலைநகராகக் கொண்டு 1782 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் காலம் 1932 இல் சியாம் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது.

விரைவான உண்மைகள் இரத்தனகோசின் காலம் Rattanakosin Period, அரசர்(கள்)/அரசி(கள்) ...

இரத்தனகோசின் இராச்சியத்தின் ஆதிக்கம் கம்போடியா, லாவோஸ், பர்மாவின் சான் மாநிலங்கள், மலாய் இராச்சியங்களின் சில பகுதிகள் வரை பரவியிருந்தது. இவ்விராச்சியம் சக்கிரி அரச மரபைச் சேர்ந்த முதலாம் இராமா (பிரா புத்தயோத்துஃபா சூலாலோக்) மன்னரால் நிறுவப்பட்டது.

Remove ads

பொது

இதன் முதல் பாதிக் காலகட்டத்தில் இராச்சியத்தின் அதிகாரம் பலப்படுத்தப்பட்டது. மியான்மர், வியட்நாம், லாவோசு நாடுகளுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வந்தன. இரண்டாவது பாதியில், பிரித்தானியா, பிரான்சு ஆகிய குடியேற்றவாத வல்லரசுகளுடனான மோதல்கள் இடம்பெற்றன. இதன் போது சியாம் தென்கிழக்காசிய நாடுகளில் இவ்வல்லரசுகளின் பிடியின் வீழாத ஒரேயொரு நாடாகத் திகழ்ந்தது.[1]

உள்நாட்டில் இரத்தனகோசின் இராச்சியம் மேற்கத்திய நாடுகளுடனான தொடர்புகளுடன் உருவாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன்.ஒரு நவீன மையப்படுத்தப்பட்ட தேசிய நாடாக வளர்ந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தின் அதிகரிப்பு, அடிமை முறையை ஒழித்தல் மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கு முறையான கல்வியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்பட்டது.

இருப்பினும், கணிசமான அரசியல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறியதால் 1932 ஆம் ஆண்டில் புரட்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, முழுமையான முடியாட்சி கைவிடப்பட்டு, அரசியலமைப்பு முடியாட்சி நாட்டில் ஏற்பட்டது.[1]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads