இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக, முழுமையும் எஃகினாலும் முழுமையும் காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானதுமான பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது.

விரைவான உண்மைகள் நிறுவுகை, தலைமையகம் ...

இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

Remove ads

வரலாறு

இந்தத் தொழிற்சாலை சுவிஸ் நாட்டு ஒத்துழைப்புடன் 1955இல் அமைக்கப்பட்டது. இது இலகுரக, அனைத்து பாகங்களும் எஃகு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற இந்திய சுதந்திரத்திற்கு பின் உருவான முதல் தொழிற்சாலை ஆகும். இது வரை 170 வகையான பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. இது 02 அக்டோபர் 1955 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது.

துவக்கத்தில் 350 அகலப்பாதை மூன்றாம் வகுப்புப் பெட்டிகளின் கூடுகளை மட்டுமே தயாரிக்கும் திறனுடையதாக இருந்தது. பெட்டியின் உட்புற கலன்களை இரயில்வே தொழிற்பட்டைகள் செய்து கொள்வதாக இருந்தது. அக்டோபர் 2, 1962ஆம் ஆண்டுமுதல் உட்புற கலன் வடிவமைக்கும் பட்டறை நிறுவப்பட்டது. படிப்படியாக உற்பத்தித் திறன் கூட்டப்பட்டு 1974 வாக்கில் முழுமையும் கலன்நிறைந்த 750 பெட்டிகள் தயாரிக்கக்கூடிய நிலை எய்தியது. இன்றைய நிலையில் 170 வகை பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 13,000 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்தத் தொழிற்சாலையில் ஒருநாளுக்கு ஆறு பெட்டிகள் வீதம் தயாரிக்கப்படுகிறது. சூலை 2011 வரை மொத்தம் 43,551 பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப் 1503 பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது.[1]

Remove ads

தொழிற்சாலை அமைப்பு

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது - கூடுகள் பிரிவு மற்றும் உட்புறக் கலன் பிரிவு. கூடுகள் பிரிவில் இரயில்பெட்டிகளின் வெளிப்புறக் கூடுகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. உட்புறக் கலன் பிரிவில் பெட்டியின் உட்புற இருக்கைகளும் பிற வசதிகளும் பொருத்தப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள்

2010-11 நிதியாண்டில் ஐ.சி.எஃப் 2 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்து தனது மின்தேவைகளில் 80% தன்னிறைவு பெற்றது. திருநெல்வேலியில் ஐசிஎஃப் நிறுவிய காற்றாலைகள் மே 2011 வரை 46 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்துள்ளன.

ஆகத்து 2011இல் நாட்டிலேயே முதன்முறையாக துருப்பிடிக்கா எஃகினாலான பயணிப்பெட்டிகளைத் தயாரிக்க திட்ட ஏற்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. 2,500 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் 1500 முதல் 1700 எண்ணிக்கை வரை வெகுவிரைவாகச் செல்லும் தொடர்வண்டிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பயணியர் பெட்டிகள் தயாரிக்கும் திறன் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தை 2013ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகத்துக்குள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. [1]

தயார் செய்யப்படுவன

Thumb
  • டீசல் மின் கோபுரம் கார்கள்
  • முதல் தர குளிரூட்டப்பட்ட பெட்டி
  • மெட்ரோ இரயில் பெட்டிகள்
  • விபத்து நிவாரண மருத்துவ ஊர்திகள்
  • டிரெயின் 18

ஏற்றுமதி

ஐ.சி.எப் பல்வேறு நாடுகளூக்கு இரயில்பெட்டிகளை ஏற்றுமதி செய்கின்றது.

மேலதிகத் தகவல்கள் ஏற்றுமதி சந்தைகள் ...

மைல்கற்கள்

இரயில் பெட்டி தொழிற்சாலையின் மைல்கற்கள் பின்வருவன:[3]

  • 1960-1961ன் போது 3 அடுக்கு ஸ்லீப்பர்ஸில் உற்பத்தி.
  • 1967ல் தாய்லாந்திற்கு போகிகள் ஏற்றுமதி.
  • 1971களில் தைவான்க்கு கோச்கள் ஏற்றுமதி
  • 1975ல் டபுள் டெக்கர் கோச்சுகள் உற்பத்தி
  • 1981-1982 காலத்தில் கொல்கத்தாவிற்கு மெட்ரோ பெட்டிகள் உற்பத்தி.
  • 1982-1983 காலத்தில் நைஜீரியாவிற்கு 32 கோச்சுகள் ஏற்றுமதி.
  • 1984-85 காலத்தில் வங்காளத்திற்கு 9 எம்.ஜி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் ஏற்றுமதி.
  • 1995-96 போது ஓவர்ஹெட் உபகரண பராமரிப்பு கோபுரம் கார் உற்பத்தி
  • 1996-97 ஆம் ஆண்டு ஐஎஸ்ஓ 9001(ISO 9001) சான்றிதழ்
  • 1996-97 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திற்கு குளிரூட்டப்பட்ட இராணுவ வார்டு கார் உற்பத்தி
  • 1997-98ன் போது தன்சானியா 27 கோச்கள் ஏற்றுமதி.
  • 1999 ஆம் ஆண்டு ஏ / சி விபத்து நிவாரண மருத்துவம் வண்டி உற்பத்தி.
  • 1999-2000 காலத்தில் துருப்பிடிக்காத எஃகு ஏ / சி கோச் உற்பத்தி.
  • 2006-2007 காலத்தில் ஏழைகள் ரதம் கோச் உற்பத்தி.
  • 2006-2007 காலத்தில் அங்கோலாவிற்கு 41 கோச்கள் ஏற்றுமதி.

==முதன் முதலில் உருவான ரயில் பெட்டி==அண்ணா

Remove ads

வெளியிணைப்புகள்

இணையத்தளம்

இரயில் பெட்டி தொழிற்சாலையின் இணையதளம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads