இரா. செல்வக்கணபதி

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரா. செல்வக்கணபதி (1940 - மார்ச் 2, 2016) தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். சைவசமயக் கலைக்களஞ்சியம் எனும் பெருந்தொகுப்பு நூலை வெளியிட்டார். [1]

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, மயிலாடுதுறையைச் சேர்ந்த இரா. செல்வகணபதி திருவாரூரில் 1940-ஆம் ஆண்டு பிறந்தார்.[2] தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர், முதுகலை, முனைவர் பட்டங்களும் பெற்றார். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1992 முதல் 94 வரை அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். 1996-இல் பணி ஓய்வு பெற்றார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இலண்டன், ஆத்திரேலியா போன்ற நாடுகள் சென்று இவர் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

செல்வக்கணபதிக்கு மனைவி சந்திரா, மற்றும் மகன் அருண், மகள் பாரதி ஆகியோர் உள்ளனர்.

Remove ads

வெளியிட்டுள்ள நூல்கள்

  • சைவசமயக் கலைக்களஞ்சியம், 10 தொகுதிகள் (2006-2012)
  • தருமபுர ஆதீனமும் தமிழும், 1984
  • சைவமும் தமிழும்[3][4] (2005)
  • 21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் (2010)
  • கம்பனில் பெண்ணியம்
  • இடர் களையும் திருப்பதிகங்கள்

குறுந்தகடுகள்

  • திருவாசகப் பேருரை (10 மணி நேரம்)
  • பன்னிரு திருமுறைகள் (பாடல்களோடு 30 மணி நேரம்)
  • கம்ப ராமாயணப் பேருரை (20 மணி நேரம்)
  • பெரிய புராணப் பேருரை (52 மணி நேரம்)[5]
  • ஆறுமுக நாவலர்

விருதுகளும், பட்டங்களும்

  • தமிழ் வித்துவான் பட்டம் (சென்னைப் பல்கலைக்க்ழகம், 1965)
  • கலைமாமணி (தமிழக அரசு)
  • செந்தமிழ் வாரிதி (யாழ்ப்பாணம், நல்லூர் ஆதீனம்)
  • ‘சிவஞான கலாநிதி’ (லண்டன் முருகன் கோயில்)
  • ஆறுமுக நாவலர் விருது (இலங்கை கம்பன் கழகம், 2014)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads