இராகவேந்திர சிங் சவுகான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராகவேந்திர சிங் சவுகான் (Raghvendra Singh Chauhan)(பிறப்பு திசம்பர் 24, 1959 ) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும்[1] பணியாற்றியுள்ளார்.[2]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
நீதிபதி பணி
சவுகான் 1959ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் பிறந்தார். இவர் பி. ஏ., எல். எல். பி. பட்டங்கள் பெற்றுள்ளார். 1983 நவம்பர் 13 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். குற்றவியல் மற்றும் சேவை விடயங்கள் இவரது சிறப்புத் துறை உள்ளது.
இவர் 13 ஜூன் 2005 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜனவரி 24.2008 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2015 மார்ச் 10 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் பெற்றார். மீண்டும் 8 நவம்பர் 2018 அன்று தெலுங்காணா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
சவுகான், ஏப்ரல் 3, 2019 அன்று தெலுங்காணா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 22 ஜூன் 2019 அன்று, தெலுங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
உத்தராகண்டு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 31 டிசம்பர் 2020 அன்று நியமிக்கப்பட்ட சவுகான், ஜனவரி 7, 2021 அன்று பதவியேற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads