இராசத்தான் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசத்தான் பல்கலைக்கழகம் (University of Rajasthan-RU) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத் தலைநகரான செய்ப்பூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். மாநில அரசின் ஆளுகைக்குட்பட்ட இப்பல்கலைக்கழகம் 1947 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் முக்கிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். இராசத்தான் மாநில ஆளுநர் இப்பல்கலைக்கழக வேந்தராக பொறுப்பு வகிப்பார்.[4]
Remove ads
வளாகம்
ஜெய்ப்பூரின் முதுகெலும்பு என்றழைக்கப்படும் சவகர்லால் நேரு மார்க் பகுதியில் சுமார் 285.29 ஹெக்டேர் (705.0) ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மைய வளாகத்தில் பல்வேறு துறைகள், நூலகங்கள், விளையாட்டு வளாகங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகியது. பல்கலைக்கழகத்தில் ஒரு நவீன விளையாட்டு வளாகம் மற்றும் ஒரு நீச்சல் குளம் அமைந்துள்ளது. முன்னர் பல தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய போட்டிகள் நடக்கும் இடமாக இவ்வளாகம் இருந்து வருகிறது.[5]
Remove ads
அமைப்பும் நிர்வாகமும்
இணைந்த கல்லூரிகள்
இதன் அதிகார வரம்பு தௌசா மற்றும் செய்ப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் பரவியுள்ளது. 2018 ஆண்டு இராசத்தான் பல்கலைக்கழகம் தனது 255 இணைப்பு கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.[6] சில இணைப்புக் கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு:
- ராவத் பி. ஜி. பெண்கள் கல்லூரி
- ஸ்ரீ சத்ய சாய் பி. ஜி. மகளிர் கல்லூரி
உறுப்புக் கல்லூரிகள்
Remove ads
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- அசோக் குமார் - கள ஹாக்கி வீரர்
- ஜக்தீப் தன்கர் - இந்திய துணைத் தலைவர் [8]
- பஜன் லால் சர்மா - ராஜஸ்தானின் முதல்வர்
- ரோஹித் போஹ்ரா, அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்
- டி. பி. சர்மா - சமூக ஆர்வலர்
- ஜெயேந்திரா கே. - இயற்பியலாளர்
- பூபேந்திர ஜடாவத் - நடிகர்
- ராம்குமார் சிங் - பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
- விபூதி பூஷன் சர்மா - அதிகாரத்துவவாதி, வழக்கறிஞர்
- வித்யாதர் கோவிந்த் ஓக் - அதிகாரத்துவம், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
- வினீத் சோனி - உயிரியலாளர்
- அனுமான் பெனிவால் - அரசியல்வாதி
- ஜுஹைர் அல்-சூன், இராஜதந்திரி, இந்தோனேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் (2018-தற்போது வரை)
- யோகேந்திர யாதவ், அரசியல்வாதி மற்றும் வாக்கு கணிப்பாளர்
- லலித் யாதவ் (அரசியல்வாதி), அரசியல்வாதி மற்றும் உறுப்பினர் ராஜஸ்தான் சட்டமன்றதிற்கு,2023 இல் முண்டாவார் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மனிஷ் யாதவ், அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் அரசியல்வாதி மற்றும் 18வது மக்களவை உறுப்பினர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads