இராசா சாண்டோ

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

இராசா சாண்டோ
Remove ads

பி. கே. ராஜா சாண்டோ (P. K. Raja Sandow, 1894[1] – நவம்பர் 25, 1943) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[2] சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் பெயர் பெற்றார். தமிழ், இந்தி, தெலுங்குத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவையை இயக்கியும் உள்ளார்.[3] ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார்.[4][5][6][7]

விரைவான உண்மைகள் ராஜா சாண்டோ, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

ராஜா சாண்டோ தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்தார்.[8] தந்தை ஒரு மருத்துவர்.[3] சாண்டோவின் இயற்பெயர் பி. கே. நாகலிங்கம். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் எஸ். என். பதங்கரின் நேஷனல் பிலிம் கம்பனியில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.[9] இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக ஜெர்மானிய பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார்.[10] 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில்தான் இவருக்கு முதன்முறையாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்கு இவருக்குக் கிடைத்த வருமானம் ரூபாய் 101.[11] வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் இவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன.[12] சில சலனப்படங்களில் நடித்த பின்னர் ரஞ்சித் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இயக்குநராக மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார்.[2] இவர் இயக்கிய முதல் படம் சினேஹ் ஜோதி (1928).[13]

தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் பிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார்.[2] பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன.[14] 1931ல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியவுடன் மறுபடியும் பம்பாய்க்குச் சென்று ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தார். பெரும்பாலும் கோஹர், சுலோசனா (ரூபி மையர்ஸ்) போன்ற நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார்.[2][10] 1932 முதல் 1935 வரை ஷியாம் சுந்தர் (1932), தேவகி (1934), இந்திரா எம்.ஏ (1935) போன்ற பல சமுதாயப் படங்களில் நடித்தார்.

1935ல் தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்ததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் பேசும்படம் மேனகா. தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கி நடித்தார். வசந்தசேனா (1936), சாலக் சோர் (1936), சந்திரகாந்தா (1936), விஷ்ணு லீலா (1938), திருநீலகண்டர் (1939), சூடாமணி (1941) ஆகியவை அக்காலகட்டத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை. இவரது கடைசித் திரைப்படம் சிவகவி (1943). நவம்பர் 25, 1943ல் கோயம்பத்தூரில் மாரடைப்பினால் மரணமடைந்தார்.[15]

Remove ads

தாக்கம்

Thumb
இந்திரா எம். ஏ (1935) படத்தில் சுலோச்சனாவுடன் ராஜா சாண்டோ

ராஜா சாண்டோதான் முதன்முறையாக திரைப்படங்களின் பெயரோடு நடிகர்களின் பெயரையும் இணைத்து வெளியிடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்திலேயே திரைப்படங்களில் முத்தக்காட்சிகளும் நடனக் கலைஞர்களின் ஆடைக்குறைப்பும் இவரால் துணிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.[16][17] புரணாக்கதைகளை மட்டுமே திரைப்படமாக்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி சமூகக் கருத்துகளைக் கொண்ட கதைகளையும் திரைப்படங்களாக உருவாக்குவதில் இவர் முன்னோடியாக விளங்கினார்.[18] வை. மு. கோதைநாயகி அம்மாளின் கதையை அதே பெயரில் அனாதைப் பெண் என்ற திரைப்படமாக 1931ல் எடுத்தார். புதினம் ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும்.[15]

என திரைப்பட வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் ராஜா சாண்டோவைப் பற்றிக் கூறுகிறார். திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை சாண்டோவின் வேலை வாங்கும் திறமையைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்:

தமிழக அரசு இவரது நினைவாக திரைப்படத்துறையில் சிறந்த சேவை புரிந்தோர்க்கு ஆண்டு தோறும் ”ராஜா சாண்டோ நினைவு விருது” வழங்கி வருகிறது.[19] திரைப்படத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 2000ம் ஆண்டு இந்தியாவில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது.[20]

Remove ads

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் வருடம், தலைப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads