இராசா லகாமகவுடா அணை

இந்தியாவின் கர்நாடக மாநில அணை From Wikipedia, the free encyclopedia

இராசா லகாமகவுடா அணை
Remove ads

இராசா லகாமகவுடா அணை (Raja Lakhamagouda dam) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் கிருட்டிணா நதிப் படுகையில் காட்டபிரபா ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதை இட்கல் அணை என்றும் அழைக்கிறார்கள். வடக்கு கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்திலுள்ள இட்கல் கிராமத்தில் இராசா லகாமகவுடா அணை உள்ளது. 62.48 மீட்டர் உயரமும் 10 செங்குத்து முகடு வாயில்களும் கொண்ட இந்த அணையின் மொத்த மேற்பரப்பு 63.38 சதுர கிலோமீட்டர்களாகும். 51.16 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் அளவு கொண்ட ஒரு பெரிய நீர்த்தேக்கமாக இது பரந்து விரிந்துள்ளது.

விரைவான உண்மைகள் இராசா லகாமகவுடா அணை Raja Lakhamagouda dam, அமைவிடம் ...

மண்ணால் கட்டப்பட்டுள்ள இந்த அணையினால் 8,20,000 ஏக்கருக்கும் அதிகமான நீர்ப்பாசன தேவைகளும் நீர் மின் ஆற்றல் உற்பத்தியும் பூர்த்தி அடைகிறது. [1] காட்டபிரபா நீர்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்படத் தொடங்கி இராசா லகாமகவுடா அணை மூன்று கட்டங்களாக கட்டப்பட்டு 2009 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. கொடையாளரும் வண்டாமுரியின் சமீன்தாருமான இராசா லகாமகவுடா சர்தேசாயின் பெயர் அணைக்கு சூட்டப்பட்டது. [2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads