இராயரகுநாத தொண்டைமான்
புதுக்கோட்டை அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜா சிறீ இராயரகுநாத தொண்டைமான் (Raja Sri Raya Raghunatha Tondaiman (பி. மே 1738 - 30 திசம்பர் 1789) என்பவர் 1768 திசம்பர் 28 முதல் 1789 திசம்பர் 30 வரை புதுக்கோட்டை அரசின் அரசராக இருந்தவர்.
Remove ads
முன்வாழ்கை
இராயரகுநாத தொண்டைமான் 1738 மே அன்று விஜய ரகுநாத ராயா தொண்டைமானுக்கும் அவரது மனைவி அரசி நல்லக்கட்டி ஆய் சாகிப் ஆகியோருக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இவர் ஒருவர்தான் இந்த இருவருக்கும் ஒரே மகன். இவர் தனிப்பயிற்சியில் கல்வி கற்றார்.
ஆட்சி
இராயரகுநாத தொண்டைமான் தன் தந்தையின் மரணத்திற்குப் பின் 1769 திசம்பர் 28 இல் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சிக் காலம் மிக நீண்டதாக இருந்தது. இராய ரகுநாத தொண்டமான் தெலுங்கில் பார்வதி பரிணயமு என்ற நூலை எழுதினார்.
இராயரகுநாத தொண்டைமான் 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு 1789 திசம்பர் 30 அன்று இறந்தார். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. இவருக்குப் பிறகு இவரது சிறிய தந்தையின் மகனான விஜயரகுநாத தொண்டமான் அரியணை ஏறினார்.
Remove ads
குடும்பம்
இராயரகுநாத தொண்டைமானுக்கு 12 மனைவிகளாவர். ஒரே சந்ததியாக ஒரு மகளான இராசகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆய் சாகிப் என்பவர் மட்டுமே இருந்தார்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads