இலக்குமி

இந்துக்கடவுள் From Wikipedia, the free encyclopedia

இலக்குமி
Remove ads

இலக்குமி (Lakshmi) அல்லது திருமகள் அல்லது அலைமகள் அல்லது மலர்மகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விட்டுணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

விரைவான உண்மைகள் லட்சுமி, அதிபதி ...
Remove ads

தோற்றம் மற்றும் புராணம்

அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார்.

பெயர்கள்

லட்சுமி என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.

வேறு பெயர்கள்

  • பத்மா: தாமரையில் வசிப்பவள்
  • கமலா: தாமரையில் வசிப்பவள்
  • பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
  • பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
  • விஷ்ணுப்பிரியா: திருமாளை விரும்புகின்றவள்

திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

படிமவியல்

லட்சுமி வடிவங்கள்

லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அஷ்ட லட்சுமிகள்

Thumb
எல்லோராவில் அமைந்துள்ள கஜலெட்சுமி சிற்பம்

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வடிவங்கள்

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.[சான்று தேவை]

16 வடிவங்கள்கான முதல் திருக்கோயில் ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவில் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், எட்டிக்குட்டைமேடில் அமைந்துள்ளது. நீங்கள் பிறந்த திதியில் லட்சுமியை வழிபாடு செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். (திதி வழிபாடு சிறப்புகள்)

1. ஆதி மகாலட்சுமி — பிரதமை திதி

2. தனலட்சுமி — துவிதியை திதி

3. வீரலட்சுமி — திருதியை திதி

4. கஜலட்சுமி — சதுர்த்தி திதி

5. சந்தானலட்சுமி — பஞ்சமி திதி

6. தான்யலட்சுமி — சஷ்டி திதி

7. விஜயலட்சுமி — சப்தமி திதி

8. வித்யாலட்சுமி — அஷ்டமி திதி

9. சௌபாக்கியலட்சுமி — நவமி திதி

10. அமீர்தலட்சுமி — தசமி திதி

11. கீர்த்திலட்சுமி — ஏகாதசி திதி

12. சக்திலட்சுமி — துவாதசி திதி

13. ஆரோக்கியலட்சுமி — திரயோதசி திதி

14. ஞானலட்சுமி — சதுர்தசி திதி

15. சாம்ராஜ்யலட்சுமி — பௌர்ணமி திதி

16. காருண்யலட்சுமி — அமாவாசை திதி

Remove ads

லட்சுமி விழாக்கள்

மந்திரங்கள்

கோயில்கள்

Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads