இலண்டன் விலங்கியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலண்டன் விலங்கியல் பூங்கா (London Zoo) இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரத்தில் அமைந்துள்ள உலகின் பழமையான விலங்குக் காட்சி சாலை ஆகும்.[7]
Remove ads
பின்னணி
இந்த விலங்கியல் பூங்கா 1828ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி திறக்கப்பட்டது.[8] தொடக்கத்தில் அறிவியல் ஆய்வுக்கான ஒரு மையமாக இந்தப் பூங்காவைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. 1832 ஆம் ஆண்டில் இலண்டன் கோபுர அரண்மனையில் இருந்த பல்வேறு வகையான காட்டு விலங்குகள் இந்த விலங்கியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு 1947ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.
தற்போது பூங்கா 698 சிற்றினங்களுடன் 20,166 தனி விலங்குகளுடன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகத் திகழ்கிறது.[9] இப்பூங்கா ரெஜெண்ட் விலங்கியல் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
இப்பூங்கா இலண்டன் உயிரியில் கழகத்தின் (1826ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகிறது. இப்பூங்கா ரெஜெண்ட் பூங்காவின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
இலண்டன் விலங்கியல் கழகம் (ஆங்கிலம்: Zoological Society of London (ZSL) சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு, சர் ஹம்பிரி டேவி ஆகியோர்களால் 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இவர்கள் இருவரும் விலங்கியல் பூங்கா அமைக்கும் நோக்கில் நிலம் கையப்படுத்தி அதற்கான பணிகளைத் திட்டமிட்டு வந்த சமயத்தில் அதே ஆண்டில் இராஃபிள்சு அவரது பிறந்த நாளான சூலை 5 ஆம் தேதி பக்கவாதத்தால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பிறகு, லான்சுடவுன் மூன்றாம் கோமானால் இத்திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு அவரின் மேற்பார்வையில் முதல் விலங்கு வசிப்பிடங்கள் கட்டப்பட்டன. 1828ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலண்டன் விலங்கியல் கழக ஆய்வாளர்கள் இப்பூங்காவில் இருந்த அரேபிய மறிமான், பெரு மறிமான், ஒராங்குட்டான் அழிந்த இனங்களான தாஸ்மேனியப் புலி தென்னாப்பிரிக்க கொகா (Quagga) ஆகியவற்றை பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டது . பின்னர் ஐக்கிய இராச்சிய மன்னர் நான்காம் சியார்சால் அரச சாசனம் மூலமாக இப்பூங்காவிற்கு 1829 இல் அனுமதியளிக்கப்பட்டது. உதவி நிதிக்காக பொதுமக்களின் பார்வைக்காக 1847 இல் இப்பூங்கா திறக்கப்பட்டது. [10] விலங்கு காட்சிசாலை அன்றாடம் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.[11]


Remove ads
பகுதிகளும் ஈர்ப்பிடங்களும்

சிங்கங்களின் நிலம்
சிங்கங்களின் நிலம் என்ற பெயரில் ஆசியச் சிங்கங்களின் வசிப்பிடம் 2016ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத்தால் திறந்துவைக்கப்பட்டது. 27,000 சதுர அடி பரப்பளவில் அமையப்பெற்ற இந்தப் பகுதியில் இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை நினைவுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தில் சிங்கங்கள் மட்டுமல்லாது அனுமான்வகை மந்தியும் குள்ளக் கீரியும் இயற்கைச்சூழலில் விடப்பட்டுள்ளன. இக்காட்சியகம் சிங்கங்களின் இயற்கையான வாழ்வாதாரங்கள் எவ்வாறு உள்ளூர் நகர்ப்புற சூழல்களோடு ஒத்துப்போகின்றன என்பதைக் காட்டுகிறது.[13]
புலி ஆள்நிலம்
இப்பூங்காவில் சுமத்திராப் புலிகள் வாழிடம் மைக்கேல் கொஸ்தோன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[14] எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆல் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் ஐந்து புலிகள் பேணப்பட்டு வருகிறது. ஜெ. ஜெ. என்ற ஆண் புலியும் மெலாதி என்ற பெண் புலியும் மூன்று சிங்கக்குட்டிகளும் இதில் அடக்கம்.[15] 27,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தோனேசியத் தாவர வகைகள் பேணப்பட்டு வருகிறது.[16]
மீன் காட்சியகம்


இப்பூங்காவில் 1853ஆம் ஆண்டு முதல் மீன் காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இதுவே உலகின் முதல் பொது மீன்காட்சி சாலையாகும்.[17]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads