இலித்தியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் ஐதராக்சைடு (Lithium hydroxide) என்பது LiOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் திறன் கொண்ட படிகமாகக் காணப்படுகிறது. தண்ணீரில் நன்றாகவும் எத்தனாலில் சிறிதளவும் இலித்தியம் ஐதராக்சைடு கரைகிறது. காரவுலோக ஐதராக்சைடுகளில் மிகவும் வலிமை குறைந்த காரமாக இது செயல்படுகிறது. வர்த்தகரீதியாக இச்சேர்மம் நீரிலி வகையாகவும் ஒருநீரேற்று வடிவிலும் கிடைக்கிறது. இவ்விரண்டுமே வலிமையான காரங்களாகும்.
Remove ads
தயாரிப்பு
இலித்தியம் கார்பனேட்டு மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்கள் இணைந்து இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக இலித்தியம் ஐதராக்சைடை உருவாக்குகின்றன.[5]
- Li2CO3 + Ca(OH)2 → 2 LiOH + CaCO3
தொடக்கத்தில் உற்பத்தியாகும் நீரேற்றானது வெற்றிடத்தில் 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி நீர்நீக்கம் செய்யப்படுகிறது. ஆய்வகத்தில் இலித்தியம் அல்லது இலித்தியம் ஆக்சைடுடன் தண்ணீர் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் ஐதராக்சைடு தோன்றுகிறது. இவ்வினைக்கான சமன்பாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.:
- 2 Li + 2 H2O → 2 LiOH + H2
- Li2O + H2O → 2 LiOH
குறிப்பாக இவ்வினைகள் தவிர்க்கப்படுகின்றன. இலித்தியம் கார்பனேட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் இலித்தியம் ஐதராக்சைடு சேர்மமே இலித்தியம் உப்புகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. எ.கா:
- LiOH + HF → LiF + H2O.
Remove ads
பயன்பாடுகள்
இலித்தியம் மசகு தயாரிப்பதற்கு இலித்தியம் ஐதராக்சைடு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் சிடியரேட்டு என்ர மசகு மிகவும் பிரபலமானதொரு மசகு ஆகும். தண்ணீர் மீதான உயர் எதிர்ப்பு தன்மை காரணமாகவும் உயர் மற்றும் தாழ் வெப்பநிலைகளில் மிகவும் உபயோகமுள்ளதாகவும் இருப்பதால் இம்மசகு எண்னெய் பொதுப் பயன்பாட்டு உயவு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது.
வளிமக் கழுவல்
விண்கலன்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் சுவாசக் கருவிகள் போன்றவற்றிற்குத் தேவையான சுவாசக் காற்றை தூய்மைப்படுத்தும் அமைப்புகளில் இலித்தியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் கார்பனேட்டு மற்றும் தண்ணீரை உருவாக்குவதன் மூலம் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை இச்சேர்மம் நீக்குகிறது.:[6]
- 2 LiOH·H2O + CO2 → Li2CO3 + 3 H2O
அல்லது,
- 2LiOH + CO2 → Li2CO3 + H2O
நீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு அதனுடைய குறைவான எடை மற்றும் குறைவான நீர் உற்பத்தித் திறன் போன்ற காரனங்களால் விண்கலன் சுவாசக் கருவிகளில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கிராம் நீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு 450 செ.மீ3 கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. ஒரு நீரேற்றானது 100 -110 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதனுடைய தண்ணீரை இழக்கிறது.
பிற பயன்கள்
வெப்பநிலை மாற்றும் ஊடகம் மற்றும் சேமிப்புமின்கல மின்பகுளியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்பாண்டத் தொழில் மற்றும் சில வகை சிமெண்ட் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அழுத்த நீர் உலைகளிலும் இலித்தியம் ஐதராக்சைடு பயனாகிறது.
Remove ads
விலை
2012 ஆம் ஆண்டில் இலித்தியம் ஐதராக்சைடு ஒரு டன் சுமார் 5000 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads