உருசிய மாநில குழந்தைகள் நூலகம்
நூலகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருசிய மாநில குழந்தைகள் நூலகம் (Russian State Children's Library) உருசிய நாட்டின் தலைநகரமான மாசுகோ நகரில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய குழந்தைகள் நூலகமாக இது கருதப்படுகிறது.[1][2] நூலகம் ஆண்டுக்கு 45,000 பார்வையாளர்களையும் ஆண்டுதோறும் 1.2 மில்லியன் இணையவழி பார்வையாளர்களையும் பெறுகிறது.[3] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, உருசிய மாநில குழந்தைகள் நூலகத்தில் 560,000 புத்தகங்கள் சேகரிப்பில் இருந்தன.[4]
Remove ads
வரலாறு
நூலகக் கட்டிடம் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. 50 ஆவது ஆண்டு நிறைவை 2019 ஆம் ஆண்டில் கொண்டாடியது.[5][2] விளாடிமிர் புடின் நூலகத்தின் ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.[4] அலோ, நெய்பர் என்ற ஒரு பண்பாட்டு பரிமாற்ற திட்டத்தை நூலகம் நடத்துகிறது. இத்திட்டம் உருசியர்களை மற்ற பண்பாட்டினரோடு அறிமுகப்படுத்த முயல்கிறது.[6] 2019 ஆம் ஆண்டில், அரேபியர்களுடனான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் மேம்பாட்டுக்கான எமிராட்டி கலிமத் அறக்கட்டளை ஏராளமான அரபு குழந்தைகளுக்கான புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியது.[3] 2020 ஆம் ஆண்டில் நூலகம் அசர்பசான் பண்பாடு மற்றும் மரபுகள் பற்றிய இணையவழி நிகழ்நிலை நிகழ்ச்சியான அற்புதமான அசர்பைசான்" என்ற திட்டத்தை நடத்தியது.[6] இதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் "டிரா எகிப்து" என்றொரு போட்டியையும் நடத்தியத. இப்போட்டியில் உருசிய குழந்தைகள் எகிப்து எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் என்பதை வரைபடங்களாகச் சமர்ப்பித்தனர்.[7]
உருசிய சனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி லாரா புசு இருவரும் 2002 ஆம் ஆண்டில் ஒன்றாக நூலகத்திற்கு வருகை தந்தனர்.[8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
