உலக காச நோய் நாள்

From Wikipedia, the free encyclopedia

உலக காச நோய் நாள்
Remove ads

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.[1]

விரைவான உண்மைகள் உலக காசநோய் நாள் World Tuberculosis Day, கடைப்பிடிப்போர் ...

உலகக் காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால் அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும். (ஏனையவை: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்சு நாள் ஆகியவை ஆகும்.[2]

Remove ads

வரலாறு

1882 மார்ச்சு 24 இல் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads