எகலியகொடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகலியகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எகலியகொடை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 70 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.
Remove ads
புவியியலும் காலநிலையும்
இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 156 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எகலியகொடை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.
இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:
சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:
Remove ads
கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயில, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரடேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.
இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:
- இரத்தினபுரி
- பெல்மதுளை
- பலாங்கொடை
- எகலியகொடை
- இறக்குவானை
- பொகவந்தலாவை
- குருவிட்டை
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads