எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி

தமிழ் நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். ஆர். கே என பிரபலமாகக் குறிப்பிடப்பட்டவரான எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி (1940–2012) என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், நாடக நடிகருமாவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

எம்.ஆர்.கேவின் முக்கிய படங்களில் குறிப்பாக வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே மற்றும் இரசினிகாந்து நடித்த தர்மத்தின் தலைவன், அருணாசலம் போன்ற படங்களிலும், கமல்ஹாசனின் மகராசன், விக்ரமின் தில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சி. வி. ஸ்ரீதரிடம் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்படத்தில் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். வி. கோபால கிருஷ்ணன் மற்றும் செந்தமரை போன்றவர்கள் நடத்திய நாடகக் குழுக்களிலும் இவர் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்தார். இவர் திரைப்படங்களிலும் மேடைகளிலும் பிரபலமான நடிகராக இருந்தார்.[2]

Remove ads

பகுதி திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

இறப்பு

எம்.ஆர்.கே 2012 ஆகத்து 2 அன்று இறந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் சில மாதங்களாக படுக்கையில் இருந்தார். இவரது மனைவி 2008 இல் இறந்தார், எம்.ஆர்.கேவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு.[சான்று தேவை]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads