எம். எம். மாரியப்பா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். எம். மாரியப்பா (M. M. Mariyappa) பழம்பெரும் நாடக நடிகரும், திரைப்பட நடிகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். மாரியப்பா தமிழ் நாடக உலகில் பாராட்டுகளும், பதக்கங்களும் பெற்றுள்ளார்.[1] இவர் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் பெரியப்பா மகன் ஆவார்.[2] எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் மாரியப்பா அவருக்குப் பின்னணிக் குரல் வழங்கினார். வள்ளி திருமணம், நந்தனார் போன்ற புகழ்பெற்ற பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.[2] இவரது நாடகக் குழுவினர் இலங்கைக்கும் சென்று நாடகங்களை மேடையேற்றியிருந்தது.
Remove ads
பட்டங்கள்
- "நாடக அரங்கு இளவரசு" என்ற பட்டத்தை தஞ்சை டி. வி. சடகோபாலாச்சாரியார் வழங்கினார்.[1]
- முன்னாள் சென்னை மாகாண ஆளுநர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கி வாழ்த்தினார்.[1]
- தமிழக அரசின் கலைமாமணி விருது (1977)
பாடிய பின்னணிப் பாடல்கள் சில
- 1947 - கஞ்சன் திரைப்படத்தில் இந்த உலகினில், நீர் சூழ்ந்த நாடெல்லாம், வாழ்க தமிழ்நாடு
- 1947 - ராஜகுமாரியில் அன்பின் பெருமை, திருமுக அழகை, அரசகுமாரி, கண்ணாரக் காண்பதன்றோ, மா மயிலென நடனம், மாரன் அவதாரம்.
- 1948 - அபிமன்யுவில் பாரில் பிறந்தென்ன புண்யம்
- 1948 - மோகினியில் வினைதனை அறுப்பான்
- 1949 - நல்லதம்பியில் ஆழி நீங்கி
- 1950 - மருதநாட்டு இளவரசியில் நதியே நீராழி, ராஜா பயம் போச்சுதே, சிந்தைக்கின்பமே
- 1953 - மனிதனும் மிருகமும் படத்தில் "ஓய்வில்லாத உலகத்திலே"
உட்பட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.
Remove ads
நடித்த படங்கள் சில
- 1952 - கலியுகம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads