எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி
சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி (M.O.P. Vaishnav College for Women) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]
Remove ads
வரலாறு
சிறீ வல்லபச்சார்யா வித்யா சபாவானது திவான் பகதூர் எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 1992-ல் எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது. எம்.ஓ.பி. அறக்கட்டளைகள் கல்லூரி வளாகத்திற்காக நிலத்தை நன்கொடையாக அளித்தன. உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிர்வாகத்தை சிறீ வல்லபாச்சார்யா வித்யா சபா மேற்கொள்கிறது. [2] 2002 ஆம் ஆண்டில், இக்கல்லூரி தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (என்ஏஏசி) நான்கு நட்சத்திரங்களுடன் அங்கீகாரம் பெற்றது, அதே ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் நிரந்தர இணைவு வழங்கப்பட்டது. இது 2004 இல் யுஜிசி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் சுயாட்சி வழங்கப்பட்டது. [3]
Remove ads
கல்வி

இந்த கல்லூரியில் 15 இளங்கலை மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும் முனைவர் பட்ட பாடத்திட்டங்களைநும் கொண்டுள்ளது. [4] இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு [5]
இளங்கலை
ஊடகவியல்
- இளங்கலை, இதழியல்
- இளம் அறிவியல் காட்சி தொடர்பியல்
- இளம் அறிவியல் மின்னணு ஊடகம்
தகவல் தொழில்நுட்பத் துறை
- இளம் அறிவியல், கணினி அறிவியல்
- இளம் கணினி பயன்பாடு
- இளம் அறிவியல் கணினி பயன்பாட்டுடன் கணிதம்
வணிகத் துறை
- பிபிஏ (இரு வேலை நேரங்கள்)
- பி.காம். (தகவல் அமைப்பு மேலாண்மை)
- பி.காம். (கணக்கியல் மற்றும் நிதி) (இரு வேலை நேரங்கள்)
- பி.காம். (சந்தைப்படுத்தல் மேலாண்மை) (இரண்டாம் வேலை நேரம்)
- பி.காம். (பெருவணிக செயலாளர்) (இரண்டாம் வேலை நேரம்)
- பி.காம். (ஹானர்ஸ்)
- பி.ஏ பொருளாதாரம் (இரண்டாம் வேலை நேரம்)
உணவு அறிவியல் துறை
- பி.எஸ்சி உணவு அறிவியல் மற்றும் மேலாண்மை
சமூக அறிவியல் துறை
- பி.ஏ. சமூகவியல்
- பி.எஸ்சி உளவியல்
முதுகலை
ஊடகவியல்
- எம்.ஏ. தகவல் தொடர்பு
- எம்.ஏ. ஊடக மேலாண்மை
தகவல் தொழில்நுட்பத் துறை
- எம்.எஸ்சி (ஐடி)
வணிகவியல் துறை
- எம்பிஏ
- எம். காம்
- எம்.ஏ. மனித வள மேலாண்மை
உணவு அறிவியல் துறை
- எம்.எஸ்சி உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை
Remove ads
கூடுதல் செயல்பாடுகள்
எம்ஓபி வைணவ கல்லூரி தங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைத் தாண்டிய பல்வேறு வசதிகளை வழங்குகிறது. கல்லூரியில் பல சங்கங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள், கலாச்சார நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் பத்திரிகை வெளியீடுகள் உள்ளன.
சங்கங்கள்
கல்லூரியில் 16 சங்கங்கள் செயல்படுகின்றன [6] மாணவர்களிடம் உள்ள ஒருங்கிணைப்பு, திட்டமிடல், மதிப்பீடு போன்ற பல உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி, அதை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதே சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.
கலாச்சார செயல்பாடுகள்
எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியானது மாணவிகளின் போட்டி உணர்வை வெளிப்படுத்தும் வருடாந்திர கலாச்சார கொண்டாட்டங்களை [7] நடத்துகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக உள்ளது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads